எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர், அக்.7- வேலூர் மாவட்டத்தில் திரா விடர் மாணவர் கழகம், மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 30.9.2017 மற்றும் 1.10.2017  ஆம் நாள்களில்  நடைபெற்றது. பத்தளபள்ளி, கலவை, தேன்பள்ளி ஆகிய இடங்களில் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. விவரம் வருமாறு:

பத்தளபள்ளி

வேலூர் மாவட்டம் பத்தளபள்ளி கிரா மத்தில் திராவிடர் மாணவர் கழகம்- மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் திராவிடர் கழக ஆசிரியரணி பொறுப்பாளர் சந்திரன் பாஸ்கரன் அவர்கள், இந்நிகழ்சிக்கு பெரியார் பற்றாளர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் திராவிடர் மாணவர் கழகத்தின் கூட்டு செயலாளர் சே.மெ.மதி வதனி, மாநில மாணவரணி துணைச் செய லாளர்கள் சுபெ.தமிழமுதன் மற்றும் த.மு. யாழ்திலீபன் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர். இந்நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட மாணவ இளைஞர்கள் பங்குகொண்டனர்.

இந்நிகழ்வில் நமது கழக ஏடுகளான ‘‘விடுதலை'', ‘‘உண்மை'', ‘‘பெரியார் பிஞ்சு'' ஆகியவற்றை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது.

கலவை

வேலூர் மாவட்டம் கலவை கிராமத்தில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இந்நிகழ்வில் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆசிரி யரணி பொறுப்பாளர் பாஸ்கர் சந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்புரையாற் றினார் பெ.வினோத்குமார்.

இந்நிகழ்விற்கு மண்டலத் தலைவர் சடகோபன் முன்னிலை வகித்தார். இந்நிகழ் வில் மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி மற்றும் மாநில மாண வரணி துணை செயலாளர்கள் சுபெ.தமிழ முதன் மற்றும் த.மு.யாழ்திலீபன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இந்நிகழ்வில் 45-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அனைத்து மாணவர்களுக்கும் தந்தை பெரி யாரின் புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சில மாணவர்கள் தொடர்ந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகளை அவர்கள் பகுதியில் நடத்துவதென முடி வெடுத்துள்ளனர். பிரச்சாரப் பயணத்திற்கு பொறுப்பாளர் சந்திரன் பாஸ்கர் அனைத்து உதவிகளையும் செய்தார்.

தேன்பள்ளி

வேலூர் மாவட்டம் தேன்பள்ளி கிரா மத்தில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இந்நிகழ்வில் பெரியார் பற்றாளர் இளங்கோ தலைமை தாங்க, தோழர் சிம்சன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி மற்றும் மாநில மாணவரணி துணை செயலாளர்கள் சுபெ.தமிழமுதன் மற்றும் த.மு.யாழ்திலீபன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இச்சந்திப்பில் 40-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து திரா விடர் மாணவர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் தேன்பள்ளியில் நடைபெற வேண்டும் என மாணவர்கள் உள்பட பொதுமக்க ளும் வேண்டுகோளாக தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner