எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அவிநாசி, அக். 7-- நவோதயா பள்ளிகளின் ஆபத்தை விளக்கி அவிநாசியில் கருத்தரங்கம் நடத்தப்படுமென்று திருப்பூர் மாவட்ட ப.க. கலந்தாய்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

கலந்துரையாடல் கூட்டம்

தமிழகம் தழுவியளவில் பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியரணி சார்பில் முதற் கட்ட சுற்றுப்பயணமாக மாவட்ட வாரியாக நடைபெற் றுவரும்  கலந்துரையாடல் கூட்டத்தின் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.09.2017, சனிக் கிழமை காலை 11 மணியளவில் திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலுள்ள பண்டாரத்தார் திரு மண மண்டபத்தில் துவங்கி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோபி.வெ.குமார ராசா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கு.மணி வண்ணன் அனைவரையும் வர வேற்றார். அவிநாசி ஆசிரியர் க.அங்கமுத்து (பநி), ஆசிரியர். அ.இராமசாமி (பநி), திருப்பூர் மாநகர திராவிடர் கழக தலை வர் இல.பாலகிருஷ்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

மா.அழகிரிசாமி உரை

நிகழ்வில் பங்கேற்றுச் சிறப் பித்த பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி அவர்கள் சிறப்புரையாற்றியதாவது:

பகுத்தறிவாளர் கழகம் செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டமாக இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.பகுத்தறி வாளர் கழகத்தின் மாநில கலந் துரையாடல் கூட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அக்கூட்டங்களில் தமிழர் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உரை, வடிக்கப்பட்ட தீர்மா னங்கள் ஆகியவற்றை செயல் படுத்தும் வகையில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக கலந்தாய்வுக் கூட்டங்களை குறைந்த செலவில் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து மாவட்டத்திற்குட்பட்ட பல் வேறு இடங்களில் நடத்தவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக கலந்து ரையாடல் கூட்டங்கள் நடை பெற்றாக வேண்டும். கூட்டங் களை சரியான நேரத்தில் துவங்கி மிகச் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். பகுத்தறிவாளர் கழகம் தனித்து அமைப்பாக செயல்படவேண்டும், ஆனால் தனியாக செயல்படக்கூடாது!

சான்றோர் பெருமக்கள், அறிஞர்கள் போன்றோரை தேடித் தேடி அடையாளம் கண்டு அவர்களை பகுத்தறிவாளர் கழ கத்திற்கு கொண்டுவரவேண் டும், பகுத்தறிவாளர் கழக மேடைகளில் அவர்களின் திற மைகளை வெளிக் கொணர வேண்டும்! வர இருக்கின்ற காலகட்டம் இக்கட்டான சூழ் நிலையாக இருக்கிறது! ஆகவே பகுத்தறிவாளர் கழகத் தில் அதிக உறுப்பினர்களை சேர்த்து விரிவுபடுத்த வேண் டும்! எழுச்சி மிகுந்த திராவிட சமுதாயத்தை படைக்க அனைத்து தரப்பினரையும் இணைத்து கைகோர்த்து செயல் படவேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

சி.ரமேசு உரை

கூட்டத்தின் நோக்கம் குறித்து துவக்கவுரையாற்றிய பகுத்தறிவு ஆசிரியரணியின் மாநில அமைப்பாளர் சி.ரமேசு அவர்கள் குறிப்பிட்டதாவது:

சமூகநீதியைப் பாதுகாப்ப தற்குத் தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களை, மாணவர் களை குறிவைத்து மத இயக் கங்கள் செயல்பட்டு வருகிறது, சாமியர்கள்  சமூகத்தைப் பற்றி சிந்திப்பது போல பாவனை காட்டுகிறார்கள். ஆகவே இவர் களின் சூழ்ச்சிக்கு யாரையும் பலியாக நாம் விட்டு விடக் கூடாது.இனவுரிமை மீட்கப் படவும், வரலாறுகள் பாதுகாக் கப்படவுமான பணிகளை பகுத்தறிவு ஆசிரியரணியை வலுப்படுத்துவதன் மூலம் சிறப்பாக செய்ய முடியும். பகுத் தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பாக அனைத்து தரப்பினரையும் அழைத்து "பாரதி தாசன் பிறந்தநாள் விழா", "திருக்குறள் கருத்தரங்கம்" ஆகிய நிகழ்வுகளை மிகச் சிறப்பாக நடத்தவேண்டும். தற்போது அனைத்தையுமே மாற்றக்கூடிய வகையில் பிஜே பியின் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எனவே நீட், புதிய கல்விக்கொள்கை, நவோதயா பள்ளிகள் ஆகிய கல்விச் சீர்கேடுகளின் மூலம் நிகழவிருக்கும் ஆபத்துக்களை விளக்கி பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அரங்குக் கூட்டம் நடத்தவேண்டும்! தமிழகத்தை மீட்கவேண்டும்! என தமது துவக்கவுரையில் குறிப்பிட்டார்.

பகுத்தறிவாளர்கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி அவர்களுக் கும், பகுத்தறிவு ஆசிரியரணி யின் மாநில அமைப்பாளர் சி.ரமேசு அவர்களுக்கும் திருப் பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது.  பகுத்தறிவாளர் கழ கப் பணிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து அவிநாசி பகுதிகளில் பகுத்தறிவாளர் களை ஒருங்கிணைத்து கழகப் பிரச்சாரங்களை எழுச்சியோடு செய்து வரும் அ.ராமசாமி அவர்களின் 76ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக அவ ருக்கு பகுத்தறிவாளர் கழகத் தின் மாநில பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி அவர்கள் பய னாடை அளித்து சிறப்பு செய் தார்.

தீர்மானங்கள்

1) சமூகநீதிக்கு சவக்குழி தோண்டி ஒடுக்கப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்க்கும் "நீட்" என்ற நுழைவுத் தேர்வால் மனமுடைந்து மரணமடைந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கலும், வீரவணக் கமும் தெரிவிக்கப்பட்டது.

2) தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழாவினையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக் குப் பேச்சுப் போட்டிகள் நடத்துவதென தீர்மானிக்கப்ப ட்டது.

3) பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி ஆகிய வற்றிற்கு அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்ப்பதென வும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை கலந்துரையாடல் கூட் டங்களை நடத்துவதெனவும், நீட், புதிய கல்விக்கொள்கை, நவோதயா பள்ளிகள் போன்ற வைகளின் ஆபத்தை விளக்கி ஒருநாள் கருத்தரங்கம் நடத்துவ தெனவும் முடிவு செய்யப்பட் டது.

4) டிசம்பர் 2 தமிழர் தலை வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோட்டில் நடை பெறும் 15000 விடுதலைச் சந் தாக்கள் வழங்கும் விழாவில் திருப்பூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் 50க்கும் குறைவற்ற சந்தாக்களை வழங் குவதென தீர்மானிக்கப்பட்டது.

5) 2018 சனவரி 5,6,7 ஆகிய நாட்களில் திருச்சியில் நடை பெறும் உலக நாத்திகர் மாநாட் டில் திருப்பூர் மாவட் டம் சார்பில் அதிகமான தோழர் களை பங்கேற்கச் செய்வதென தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

பொறுப்பாளர்கள் நியமனம்

பகுத்தறிவாளர் கழகம், திருப்பூர் மாவட்டம், தலைவர்- கோபி.வெ.குமார ராசா, துணை தலைவர் -நளினம்.நாகராஜ், செயலாளர் -கு.மணி வண்ணன், துணை செயலாளர்-ஆசிரியர்.முத்து.முருகேசன் (ஓய்வு), பொருளாளர்- அ.பொன்னுச்சாமி, அமைப்பாளர்-குமாரசாமி, அவினாசி நகர தலைவர் -ஆசிரியர் அ.இராம சாமி (ஓய்வு), துணை தலைவர்- வீரமணி, செயலாளர்- க. அங்க முத்து, துணை செயலாளர்-சேகர், திருப்பூர் மாநகர தலை வர் -ஆசிரியர்.முத்தையா(ஓய்வு)

பங்கேற்றோர்

அவிநாசி-- ஆ.பொன்னுசாமி, ப.குமாரசாமி, பழனிச்சாமி, ஆசிரியர் க.க.ஆறுமுகம் (ஓய்வு), ஆசிரியர் கிருஷ்ணசாமி (ஓய்வு), செ.செல்வராசு, ப.வீரப்பன், செயராஜ், சேகர், "சன் ஆர்ட்ஸ்" ஓவியர் கணேஷ், சேவூர்.தேவ னாதன் கோவை மண்டல இளைஞரணி செயலாளர் ச.மணிகண்டன், திருப்பூர் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ச.துரைமுருகன், திருப் பூர் மாநகர  செயலாளர் பா.மா.கருணாகரன் ஆகியோர் பங் கேற்றுச் சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner