எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தஞ்சை, அக். 14- 10.10.2017 அன்று மாலை 6 மணியள வில் தஞ்சாவூர் சிவகங்கைப் பூங்கா அருகில் திராவி டர் கழக இளைஞரணி, மாணவரணி ஏற்பாட்டில் "தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா தீபாவளி - மூடநம்பிக்கை ஒழிப்பு" தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இத்தெருமுனைக் கூட்டத் திற்கு தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் அ.தனபால் தலைமையேற்று உரையாற்றினார். தஞ்சை மாநகர இளைஞரணி தலைவர் ச.இரமேசு, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அ.பெரியார் செல்வன், மாநகர மாணவரணி தலைவர் ஆ.மதன் ராஜ் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் கலந்துகொண்டு தொடக்க வுரையாற்றினர். அதனை தொடர்ந்து திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் இராம.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் சமுதாய சீர்திருத்தங்கள், பெண்ணடிமை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவைகளை எடுத்துக்கூறியும் மக்கள் மத்தியில் மண்டிக்கிடக்கின்ற வகையில் "தீபாவளி" பண்டிகையின் ஆபாசத்தினை விளக்கிக் கூறி மக்கள் மத்தியில் எழுச்சி மிகுந்த சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செய லாளர் கோபு.பழனிவேல் நிகழ்வின் தொடக்கத்தில் கழக பாடல்களை பாடியும் நிகழ்வினை ஒருங்கி ணைத்தும் உரையாற்றினார்.

பங்கேற்றோர்

மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், ப.க. பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, மாவட்ட அமைப்பாளர் ப.தேசிங்கு, மாவட்ட துணை செய லாளர் ச.சந்துரு, ஒன்றிய தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர் சே.ஏகாம்பரம், மாநகர தலைவர் ப.நரேந்திரன், மாநகரச் செயலாளர் சு.முருகேசன், மாவட்ட ப.க. புரவலர் ஆ.ஜெயராமன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் பொ.ராஜீ, தலைமை கழக பேச்சாளர் பூவை.புலிகேசி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார், ஒன்றிய ப.க. தலைவர் சோ.இராமகிருஷ்ணன், மாநகர ப.க. செயலாளர் ம.லெட்சுமணசாமி, பொதுக்குழு உறுப்பினர் வ.ஸ்டா லின், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், மாநகரத் துணைத் தலைவர் கரந்தை டேவிட், மண்டல மாணவரணி செயலாளர் அண்ணா.மாத வன், மாவட்ட மாணவரணி தலைவர் வே.தமிழ்செல்வன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ப.விஜயகுமார், செயலாளர் ந.வெங்கடேசன், அமைப்பாளர் ஆ.இரமேஷ், உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்பிரமணியன், பெரி யார் பெருந்தொண்டர் தண்டாயுதபாணி, மாநகர மாணவரணி செயலாளர் ந.காவியன், அமைப்பாளர் செந்தூரபாண்டியன், ரெட்டிப்பாளையம் கோவிந்த ராசு, மாணவரணி தோழர்கள் சரவணன், இளந்தென் றல், சிந்தனைசெல்வன், திருக்குறள் சோமசுந்தரம் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் தஞ்சை மாநகர திராவிடர் கழக செய லாளர் சு.முருகேசன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner