எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுப்பாளையம், அக். 17- கடலூர் புதுப்பாளையம் திருப்பு முனை பயிற்சி மய்யத்தில் 7.10.2017 அன்று மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை விடியல் சிந்தனையாளர் பேரவை சார் பில் இதழாளர் கவுரிலங்கேஷ் நினைவு கருத்தரங்கம் - படத் திறப்பு நிகழ்ச்சி திமுக தேர் தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

நகர திமுக செயலாளர் கே.எஸ்.இராசா ஏ.அய்.டி. யூ.சி பொதுச்செயலாளர் எம். சேகர், மாவட்ட திராவிடர் கழக தலைவர் தென்.சிவக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் கோ. வனராசு வரவேற்புரையாற்றி னார்.

முனைவர் துரை.சந்திரசேகரன் உரை

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் கருத்துப் போ ராளி கவுரிலங்கேஷ் படத் தினை திறந்து வைத்து சிறப் புரையாற்றினார். அவர் தமது உரையில்:- இந்துத்துவா வெறி யர்களின் கொலை பாதகச் செயல்களையும், இதழாளர் கள் - முற்போக்குச் சிந்தனை யாளர்கள் எனகடந்த சில ஆண்டுகளில் படுகொலைக்கு ஆளான பன்சாரே, நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி ஆகியோரின் மனித நேய - மனித உரிமைப் பணிகள் குறித் தும் எந்தவித நடவடிக்கையும், கொலைகாரர்களை தண்டித் திடும் நிலையும் எடுக்காத மத்திய மாநில அரசுகளின் போக்கையும் விளக்கிப் பேசி னார்.

வாசிப்பாளர் சங்க நிர் வாகி பால்கி, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் திருமார்பன், இதழாளர்கள் சந்தன.முத்துக்குமார், கலை நிலவன் ஆகியோர் நினை வுரையாற்றினர்.

கவிஞர்கள் கவிமனோ, சுபா, வெற்றிச்செல்வி, சிறீ தேவி கண்ணன் ஆகியோர் கவிதை புகழ் பாடினர். இத ழாளர் அன்பன் சிவா நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் மண்டல இளைஞ ரணி செயலாளர் வி.திரா விடன், கடலூர் நகர கழகச் செயலாளர் இரா.சின்னதுரை, பெரியார் பெருந்தொண்டர் சு.நாராயணசாமி, மாதவன், வெண்புறா குமார், வழக்கு ரைஞர் கோ.மன்றவாணன் ஆகியோர் பங்கேற்றனர். இறு தியாக ஓவியப்பாவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner