எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆயக்காரன்புலம், அக். 17- தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாளினை முன் னிட்டு திருத்துறைப்பூண்டி மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள பள்ளி கள், கல்லூரிகளில் மரக் கன்றுகள் நடும் விழா சிறப்புற நடைபெற்றது.

ஆயக்காரன்புலம் டாக் டர் சிவக்கண்ணு மகளிர் கலை  அறிவியல் கல்லூரி யில் (28.9.2017) மாவட்டத் தலைவர் கி.முருகையன் மரக்கன்று வழங்கினார். கல்லூரியின் தாளாளர் த. பிரபாகரன் மற்றும் கல்லூ ரிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இக்கல்லூரியின் நிறுவ னர் டாக்டர் சிவக்கண்ணு ஆயக்காரன்புலத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தமிழ்வழிக்கல்வி பெற்று நாடறிந்த புகழ்பெற்ற மருத் துவராக விளங்குகிறார். திருச்சி. தெண்ணூரில் டாக் டர் சிவக்கண்ணு ஒவ்வாமை மருத்துவமனை உள்ளது.

இவர் தந்தை பெரியா ரின் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவர். சீரிய பகுத் தறிவாளர்.

தான் பிறந்த ஊரில் பெண் கள் மட்டும் பயிலக்கூடிய கல்லூரி நிறுவ 10 ஏக்கர் நிலமும் ஒரு கோடி ரூபாய் பணமும் அரசுக்குத் தந்து தன் பெயரையே முன்னி லைப்படுத்தி கொள்ள வேண்டாம் என்றும் கேட் டுக் கொண்டும் அரசு அதை ஏற்றுக்கொண்டு முன்வராத தாமத்தினால் தானே கட்ட டங்கள் நிர்மானித்து இவ் வாண்டு கல்லூரி திறப்பு விழா கண்டது. டாக்டர் சிவக்கண்ணு சிறந்த பெரி யார் பற்றாளர்; சிறந்த தொண் டறச் செம்மல்; தமிழ் மீது தீராக் காதல் கொண்டவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner