எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொன்செய், அக். 26- தந்தை பெரியார் அவர்களின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழகம் எங்கும் உற்சா கத்துடனும், பேரார்வத்துடனும் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

பொன்செய்

செம்பனார் கோயில் ஒன்றியத்தில் பொன்செய் கிராமத்தில் 19.9.2017 அன்று தந்தை பெரியார் அவர் களின் 139ஆவது பிறந்த விழா சிறப்பாக கொண்டா டப்பட்டது.இவ்விழாவில் முதலில்  இரு இடங்களில் திராவிடர் கழக கொடி ஏற்றப்பட்டது. நீட்  தேர்வு எதிப்பு மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்பு பற்றி பேசினார்கள். விழா முடிவில் பொன்செய் ஆர்.எஸ். உதவி நடுநிலைப்பள்ளி மாணவாகளுக்கு இனிப்பு வழங்கி கழகத்தினர் மகிழ்ந்தனர்.

இவ்விழாவில் மாவட்ட துணை செயலாளர் கட்பீஸ் மா.கிருட்டிணமூத்தி தலைமை வகித்தார். திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் கனகலிங்கம் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு ஆற்றிய தொண்டு மற்றும் சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு பற்றி பேசியவர்களான வி.சிக. செம்பை ஒன்றிய  அமைப்பாளர் கலைவண் ணன், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் இராஜ.இராஜசேகரன், தி.மு.க தோழர் என்.முரார்ஜி, வி.சி.க அமைப்பாளர் தமிழ்வளவன், வி.சி.க  பிரபு, பகுத்தறி வாளர் கழக செம்பை ஒன்றிய தலைவர் ஆற்றல் அரசு, வேந்தன் திராவிடர் கழக மாணவரணி முகில், திராவிடர் கழக மாவட்ட மாணவரணி செயலாளர் பா.மதியழகன், வி.சி.க.  சே.பாலாஜி இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஞ்ஞானம் நன்றி கூறினர்.

மதுரை மீனாட்சிபுரம்

2.10.2017 அன்று மதுரை மீனாட்சிபுரத்தில் தந்தை பெரியார் அவர்களின் 139ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா (அனைத்து கட்சிகள் சார்பில்) எழுச்சியுடன் நடைபெற்றது.

விழாவில் பெ.தனசேகரன் தலைமையுரையாற்றி னார். இரா.சுரேஷ், கா.பிச்சைபாண்டி ஆகியோர் முன் னிலை வகுத்தனர். தொடக்கத்தில் உசிலம்பட்டி மாவட்டத் தலைவர் கா.சிவா, மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி, திமுக வட்டச் செயலாளர் நல்லதம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேனாள் கவுன்சிலர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா) விஜயராஜன், மதிமுக தொழிற்சங்க இணைச்செயலாளர், மகபூப்ஜான், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரகளம், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஜெயபால் சண்முகம், மதுரை மண்டலச் செயலாளர் மா.பவுன்ராசா ஆகி யோர் ஆற்றிய உரைக்கு பின்பு நிறைவாக மாநில ப.க. தலைவர் முனைவர் வா.நேரு சிறப்புரையாற்றினார்.

விழாவில் பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மாநில அமைப்புச் செயலாளர் வே.செல் வம், மதுரை மண்டலத் தலைவர் அ.முருகானந்தம், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஜெயம்பெருமாள், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, மாவட்ட இணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் கனி, பேக்கரி கண்ணன், வேல் துரை, பழனி, பகுதி செயலாளர் இளங்கோவன், விடு தலை ராசா, ராஜேந்திரன், கணேசன், சண்முகம், முத் தையா, செல்வம், ராசா, சேகர் உள்ளிட்ட தோழர்கள், பொதுமக்கள் பங்கேற்றார்கள். முன்னதாக பெரியார் பெருந்தொண்டர் சீனி அவர்களின் நினைவு கழக கொடி கம்பத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப் பட்டது.

வேலம்பட்டி

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் உலக மனித நேய மாண்பாளர் தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 4.10.2017 அன்று மாலை 3.30 மணியளவில் மாணவர்களுக்கு தந்தை பெரியாரைப் பற்றிய கருத்துரை வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வேலம்பட்டி அஞ்சல்துறை மேனாள் அலுவலர் வேலை.பொற்கோவன் தலைமை வகித்து பேசினார். நாகரசம்பட்டி பேரூராட்சி மேனாள் தலை வர் க.சின்னசாமி, மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் தா.சுப்பிரமணியம், காவேரிப்பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் சிவ.மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

வேலம்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரி யர் எல்.அரசு தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசினார்.

தமிழாசிரியர் சுரேசு கருத்துரையாற்றினார். திரா விடர் கழக இளம் பேச்சாளர் காவேரிப்பட்டணம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் அகரம் நாத்திகம் நா.சதீஷ்குமார் பகுத்தறிவே எங்கள் பாதை! மனிதநேயமே எங்கள் கொள்கை! சமத்துவமே எங்கள் இலக்கு! இதற்கு எது தடையாக வந்தாலும் அதை தகர்த்து எறிவதே எங்கள் வேலை! மதங்களை ஒழிப் போம் மனித நேயம் காப்போம் ஜாதிகளை ஒழித்து சமத்துவம் படைப்போம். இதுவே எங்கள் வாழ்நாள் பணி எனத் தந்தை பெரியாரின் சமுதாய சீர்திருத்தப் பணிகளை விளக்கி மூடநம்பிக்கையிலிருந்து மாண வர்கள் தெளிவுப்பெற பல்வேறு அறிவியல் கருத்து களை விளக்கி சிறப்பு கருத்துரையாற்றினார். அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் பெரியார் பிறந்த நாள் வாழ்த்து அட்டைகளையும் இனிப்புகளையும் வழங்கினார்.

மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கோ.திரா விடமணி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது,தந்தை பெரியார் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு பெற அவர் ஆற்றிய பெரும் பணிகளை விளக்கியும் தந்தை பெரியார், பெருந்தலைவர் கல்வி வள்ளல் காமராசரைப் பற்றி விளக்கியும், தந்தை பெரியார் கடந்த எழுபத்தைந்து, எண்பது ஆண்டுக ளுக்கு முன்பு இனி வரும் உலகம் என்ற ஒரு சிறிய நூலில் சோதனைக் குழாய் குழந்தை, கம்பியில்லா தொலை தொடர்பு சாதனைகளை கடந்த என்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் தந்தை பெரியார். தொலைநோக்கு சிந்தனையாளர் என்றுகூறி சிறப்புரை யாற்றினார்.

இறுதியாக பள்ளி துணை தலைமை ஆசிரியர் பி.பாலசுந்தரம் நன்றி கூறினார்.

திருவரங்கம்

1.10.2017 அன்று மாலை 6.30 மணிக்கு திருவரங்கம் பெரியார் மய்யத்தில் தலைவர் மு.மீனாட்சி சுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் .பொன்னுசாமி (தி.மு.க. சொற்பொழிவாளர்) வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்திற்கு சா.கண்ணன், இரா.முருகன், ப.இராமநாதன், தா.ஜெயராசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். க.ராசேந்திரன் அற்புதமான சொற்பொழி வாற்றி வாழ்த்துரை வழங்கினார்.

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - பகுத்தறிவு சிந்தனைகள் என்ற தலைப்பில் முனைவர் சு.செயலா பதி பல்வேறு புதிய கருத்துக்களை வழங்கினார்

பங்கேற்றோர்

ஜே.பென்னி காட்டுர் கனகராசு, செல்வம், முரு கேசன், கே.முருகேசன், ரயில்வே பெ.பாபு, சி.பிச்சை மணி, வை.முத்து, ம.இராமசாமி, சு.இளங்கோவன் (பெல்), தி.மு.கழகத்தினர் ஸ்டைல்ராஜ், ஆர்.சண் முகம், சு.பாசுகரன், எம்.நேருஜி, பிரகாசமூர்த்தி, ஆர்.சம்பத், மு.ராசேந்திரன், டி.பி.தியாகராசன், தமிழ் அன்பர்கள் குறள்மொழி வி.மாணிக்கம், இரா.அண்ணா துரை, என்.மோகன்ராம், ஜெ.ரிச்சர்டு நிக்சன், வி.நமச்சிவாயம், பி.மூக்குப்பிள்ளை, .ஆர்.லோகநாதன், எஸ்.கலியபெருமாள், என்.சேதுராமன், வி.கருப்பையா (பிஎஸ்என்எல்), கே.வி.நந்தகுமார் மற்றும் தோழர்கள், தோழியர்கள் பெருந்திரளாக பங்குகொண்டு சிறப் பித்தார்கள். ஆ.ரூசோ நன்றி கூறினார்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி கழக மாவட்டத்தில் ஒன்றியம், நகரம் முழுவதும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139ஆவது பிறந்த நாளை மிக மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ச.பொன்முடி தலைமையில் எழிலூர் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் விடியற் காலை 6 மணிக்கெல்லாம் துவங்கப்பட்டது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மீனம்ப நல்லூர், கோட்டூர் சென்று கோட்டூர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த கழக தோழர்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தில் புழுதுகுடி, விளக்குடி, இராய நல்லூர் வந்தடைந்து இராயநல்லூர் கடைவீதியில் உள்ள மாவட்ட செயலாளர் ச.பொன்முடி இல்லம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணி விக்கப்பட்டு மேட்டுப்பாளையம் கழக கொடியினை ஏற்றி தொடர்ந்து மடப்புரம் (காவலர் குடியிருப்பு) அருகே உள்ள கொடிகம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. சரியாக 10 மணிக்கெல்லாம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள "வெண்தாடி வேந் தர்" தந்தை பெரியார் வெண்கல சிலைக்கு திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன் தலைமையில் மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை யில் கழக தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்தனர். அதன்பிறகு திருத்துறைப்பூண்டி திரா விட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற உறுப் பினர் ப.ஆடலரசன், நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண் டியன் மற்றும் திமுக தொண்டர்கள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. அதுபோல தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நகர செயலாளர் மதன்குமார் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பில் மாலை அணி வித்தனர். அதன் பிறகு நகரம் முழுவதும் முழக்கங்கள் முழங்க தந்தை பெரியார் வாழ்க! என்று முழக்கங்கள் எழுப்பியபடியே கழகக் கொடி ஏற்றப்பட்டது. அதுபோல பன்னத்தெரு, ஆய்மூர் (மறைந்த மீராசன் நினைவு கொடிகம்பம்), ஆலங்குடி, மற்றும் அனைத்து ஒன்றிய நகரத்திலும் கொடியினை ஏற்றி சிறப்பித்தனர். இதில் நகர செயலாளர் பன்னத்தெரு வி.நாகராஜன், பெரியார் பிஞ்சு அறிவு முதல்வன், தி.குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் பி.செல்வம், பெரியார் பெருந் தொண்டர் சு.பழனிவேல், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சி.கலைவாணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன், மாவட்ட மாணவரணி செயலா ளர் அஜெ.உமாநாத் தலைமையில் ஒன்றிய தலைவர் அய்.பாஸ்கர், ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், மாவட்ட பகுத்தறிவாளர் இரா.புகழேந்தி, கிளை தலைவர் அய்யங்கட்டி உ.ஜீவானந்தம், பன்னத்தெரு மாராச்சேரி பகுத்தறிவாளர் சுரேஷ், ஆலத்தம்பாடி பாலு, பகுத்தறிவாளர் நேரு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பெரியார் வாழ்க! பெரியார் வாழ்க என பொதுமக்கள் புதிய பேருந்துநிலையம் அருகே கூடி நின்று முழக்கம் போட்டது கூடியிருந்த மக்களுக்கு வியப்பாக இருந்தது. அனைவருக்கும் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.கவிதம்பி நன்றி கூறினார்.

புதிய கழக தோழர்கள் மணிகண்டன், சரவணன், கார்த்திக் ஆகியோர் நமது கழக தோழர்களோடு கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் 139-ஆவது பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப்பட்டது.

திமுகவின் சார்பில் சட்ட மன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு திருமயம் எஸ்.ரகுபதி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன் மாநில இலக்கிய அணிச் செயலாளர் கவிதைப்பித்தன் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் த.சந்திரசேகரன், நகரச் செயலாளர் க.நைனா முகம்மது மற்றும் ஏராள மான கழகத் தொண்டர்களும் தோழர்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமையில் மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் இர.புட்பநாதன், மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா மாவட்ட துணைத் தலைவர் செ.இராசேந்திரன், அறந் தாங்கி மாவட்ட ப.க. தலைவர் செ.தர்மசேகர், நகரத் தலைவர் சு.கண்ணன், நகரச் செயலாளர் ரெ.மு.தரும ராசு, நகர இளைஞரணிச் செயலாளர் பு.சி.இளங்கோ, மகளிர் பாசறை அமைப்பாளர் த.செயலெட்சுமி, புதுகை ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ, திருமயம் ஒன்றிய இளைஞரணி மெ.கண்ணன், மாவட்ட ஆசிரி யரணி அமைப்பாளர் மு.தேவகுமார், பெரியார் பெருந் தொண்டர் தி.இராசமாணிக்கம், சிவக்குமார் மகளிரணி யைச் சேர்ந்த சி.நாத்திகா, ஆறு.தமிழன்பு, பகுத்தறிவா ளர் கழகத்தைச் சேர்ந்த இளங்கோ, இளந்தமிழ் மாண வரணியைச் சேர்ந்த பெ.அன்பரசன், த.முல்லைவேந் தன், மு.ஸ்டாலின், பெரியார் பிஞ்சுகள் சி.கனிமொழி, சி.எழிலரசன் ஆகியோரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகரச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் புதுக் கோட்டை சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் இரா.திருமறவன் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு ஆகியோர் முன்னிலையில் தோழர்கள் கலந்து கொண் டனர். மாவட்ட துணைச் செயலாளர் திலீபன்ராஜா, மாவட்டப் பொருளாளர் செ.பாவாணன், செ.சார்லஸ், யோகராஜ், அழகுராஜா உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

புதுக்கோட்டை தெற்கு பிச்சத்தான்பட்டியில் தந்தை பெரியார் நற்பணி மன்றம் சார்பாக விழா நடத்தப்பட்டது. மன்றத்தின் தலைவர் அ.பத்மநாபன் தலைமையில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டது.

மாணவர்களுக்கு கபாடிப் போட்டியும் 100 -மீட்டர், 200 -மீட்டர், 500 -மீட்டர், 1200 -மீட்டர், 1500- மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் மாணாக்கர்களின் வயதுக்கேற்ப இருபால் மாணவர்களுக்கும் நடத்தப் பட்டன. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுகை யில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியல்லாமல் தனி யாரும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டிய அவசியத்தையும் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி வாழ்த்தினார்.நிகழ்ச்சியில் மேலும் துணைத் தலைவர் செ.இராசேந் திரன். நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளாக தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு நூலும் பிற பரிசுப் பொருட்களும் தந்தை பெரியார் நற்பணி மன்றம் சார்பாக வழங்கப் பட்டது. மன்றத்திற்கு கழகத்தின் சார்பாக தமிழர் தலைவர் அய்யா அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூல் வழங்கப் பட்டது.

மாவட்டத் திராவிடர் கழக தலைமை அலுவலகம் மச்சுவாடி கே.எல்.கே.எஸ். நகர் பெரியார் சாலை பிச்சத்தான்பட்டி நெடுஞ்சாலை முக்கம் துணைத் தலைவர் ராசேந்திரன் இல்லம், சிப்காட் தேன்மொழி (மண்டலச் செயலாளர்) இல்லம் ஆகிய இடங்களில் கழகக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

தலைமைக் கழக வழிகாட்டுதலின்படி வரும் 30-ஆம் தேதிக்குள் மாவட்டத்திற்குள் 139-இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கன்றுகள் கொண்டு வரவும் குழிகள் வெட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்டத் திராவிடர் கழக மாணவரணியின் சார்பில் இலுப்புரை அடுத்த மாராப்பட்டி கிராமத்தில் உள்ள அய்யாவின் சிலைக்கு மாணவரணியைச் சேர்ந்த பெ.அன்பரசன் தலைமையில் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மு.ஸ்டாலின், சி.பொன்னுச்சாமி, ச.வினிதாதேவி, பி.செல்வம் சி.பால்சாமி, ச.விக்னேஷ், பெ.தேன் மொழி, செ.முத்து, மா.ராஜா, பாலகிருஷ்ணன், ம.வெள்ளைச்சாமி, பெ.பால்சாமி, சே.இராசு, பொ.சக்தி வேல், பொ.சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner