எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்மன்பேட்டை, அக். 28 24.10.2017 அன்று மாலை 6.30 மணியள வில் அம்மன்போட்டை ஒன்றியத் தலைவர் கண்ணன் இல்லத்தில் திருவையாறு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், ஒன்றியத் தலைவர் ச.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கூட்டத் தின் நோக்கம் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சந்தா வழங்குதல், திருக் காட்டுப்பள்ளியில் நடைபெறும் கரி காலன் விழாவினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.

தொடர்ந்து ஒன்றிய இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய மக ளிரணி தலைவர் மலர்கொடி, அம்மன் பேட்டை எம்.எஸ்.கலியபெருமாள், ஓவியர் புகழேந்தி, இராயப்பேட்டை கவுதமன், தஞ்சை நகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய அமைப்பாளர் விவேகவிரும்பி, ஒன் றியத் தலைவர் ச.கண்ணன், பெரியார் பெருந்தொண்டர் இரத்தினகிரி, மாநில ப.க. பொதுச்செயலாளர் மா.அழகிரி சாமி ஆகியோர் உரைக்குப்பின் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையுரையாற்றினார். மோகன் ராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

தீர்மானம் 1: 23.10.2017 அன்று கடலூரில் நடைபெற்ற கழகப்பொதுக் குழு தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2: 4.11.2017 அன்று திருக்காட்டுப் பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா கல் லணையை கட்டிய திராவிட மன்னன் கரிகாற்சோழன், நரகாசுரன் பெருவிழா, திராவிடர் திருநாள் பொதுக்கூட்டத்தில் திருவையாறு ஒன்றிய தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்வதுடன், பொதுக் கூட்டத்தை விளக்கி சுவர் விளம்பரம், பிளக்ஸ் விளம்பரம் உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களையும் சிறப்பாக செய்து பொதுக்கூட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படு கிறது. கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவுசெய்யப்படுகிறது.

தீர்மானம் 3: திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (டிசம்பர் 2) விழாவினை திருவையாறு ஒன்றியத்தில் மனிதநேய பணிகளை மேற்கொண்டு சிறப்பாக கொண்டாடவும், டிசம்பர் 2 அன்று ஈரோட்டில் நடைபெறும். ஆசிரியர் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்பதுடன் திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 50 விடுதலை சந்தாக்களை பிறந்தநாள் பரிசாக வழங் குவது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner