எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ.5 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கிருட்டிணகிரி

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜகதாப் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 13.10.2017 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மரக் கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கோ.திராவிடமணி தலைமையில் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் சிவ.மனோகர், பள்ளி தலைமை ஆசி ரியர் என்.ஜமுனாராணி, ஒன்றிய தலைவர் சி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட துணைத் தலைவர் தா.சுப்பிரமணியம், மேனாள் மாவட்ட செயலாளர் பெ.மதிமணியன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட ப.க. துணைத் தலைவர் செ.ப. மூர்த்தி, ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன், ஒன்றிய அமைப்பாளர் பெ.செல்வம், ஒன்றிய துணைச் செய லாளர் சி.இராசா, பொறியாளர் பெ.செயபிரகாஷ், பள்ளி யின் தேசிய பசுமை படை ஆசிரியர் சி.நாராயணன், பள்ளி உதவியாளர் ஆர்.சின்னசாமி உள்பட மாணவச் செல்வங்களுடன் தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி  மரக்கன்று நடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம்

வேட்டவலம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் 17.9.2017 அன்று காலை 8 மணி யளவில் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் இல்லம், அண்ணா தெரு, மாவட்ட அமைப்பாளர் கடை, காந்தி சாலை ப.பழனி அவர்களின் கடை  ஆகிய இடங்களில் பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. கடைத்தெரு விழாவில் மாவட்டத் தலைவர் பி.பட்டாபிராமன், மாவட்ட அமைப்பாளர் சு.ஏழுமலை, மாவட்ட இளைஞரணித் தலைவர் ரா.திருமலை, நகர கழகப் பொறுப்பாளர்கள் ப.பழனி, கு.அருண்குமார், ஆசிரியர் ப.குப்பன், திமுக இலக்கிய அணித் தலைவர் கோ.சங்கர், கோபிநாதன், சு.யுவராசன், ப.குப்புசாமி மற்றும் ஏராளமான  பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்பும் துண்டறிக்கையும் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

17.9.2017அன்று காலை 9 மணிக்கு கழகத்தின் சார்பாக நகரச் செயலாளர் மு.காமராஜ் அவர்களின் முத்துமளிகை கடையின் வெளியே மேடையமைத்து பெரியார் படம் வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் தலை வர் பி.பட்டாபிராமன், மாவட்ட இளைஞரணித் தலை வர் ரா.திருமலை, மாவட்டத் துணைத் தலைவர் சா.கிருட்டிணன், கீழ்கச்சிராப்பட்டுத் தலைவர் கோ.தேவ ராஜ், திருவண்ணாமலை மருந்தாளுநர் எம்.விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு மற்றும் தேநீர் செயலாளர் காமராஜ் வழங்கினார்.

போளூர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகர திராவிடர் கழகத்தின் சார்பாக அண்ணா சிலை அருகில் பெரியார் பல்பொருள் அங்காடியில் 17.9.2017 அன்று காலை 8.30 மணியளவில் நகரத் தலைவர் பழனி, பெரியார் படம் வைத்து மாலையணிவித்தார். உடன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உண்ணாமலை பழனி, ப.அண்ணாதாசன் மாவட்டச் செயலாளர் ஒன்றி யத் தலைவர் எம்.எஸ்.பலராமன், மாணவரணித் திலீபன் ஆகியோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

வெண்மணி

போளூர் வட்டம் வெண்மணி கிராமத்தில் 17.9.2017 அன்று காலை 8 மணிக்கு ஒன்றியத் தலைவர் எம்.எஸ். பலராமன் கடையின் முன்பாக பெரியார் படம் வைத்து மாவட்டச் செயலாளர் ப.அண்ணாதாசன் மற்றும் ஏராள மான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒன்றியத் தலைவர் மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

செங்கம்

காலை 9 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலைக்கு நகரத்தலைவர் கு.பச்சையப்பன் தலைமையில் நகரச் செயலாளர் அ.குமரேசன், பொருளாளர் கு.ராஜா, செங்கம் ஒன்றியத் தலைவர் கு.ராமன், மேல்செங்கம் தலைவர் பா.பலராமன், மாணவரணி அ.லெனின், ரா.அன்பு இளைஞரணி ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து ஒலிமுழக்கமிட்டு உறுதியேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கடை தெருவில் மாசிலாமணி நகரத் தலைவர் அவர் களின் கடை முன்னர் 17.9.2017 அன்று காலை 8.3-0 மணிக்கு பெரியார் படம் வைத்து மாவட்ட ப.க. தலைவர் பா.வெங்கட்ராமன் மாலை அணிவித்து வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி அய்யாவின் 139ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்ன சமுத்திரம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சென்ன சமுத்திரம் கிளைக்கழகம் சார்பில் 17.9.2017 அன்று காலை 8 மணியளவில் தந்தை பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி அய்யாவின் 139ஆவது பிறந்த நாள் விழாவை ஏராளமான மக்களுடன் ஒன்றியத் தலைவர் கு.ராமன் கொண்டாடினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது.

முன்னூர் மங்கலம்

புதுப்பாளையம் ஒன்றியத் தலைவர் அ.திராவிடப் பழனி தம் இல்லத்தின் முன் 17.9.2017 அன்று காலை 8 மணியளவில் முன்னூர் மங்கலத்தில் பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி பெரியார் 139 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடினார்.

கீழ்கச்சிராப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு கிளைக்கழகம் சார்பாக தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா 17.9.2017 அன்று 8.30 மணியளவில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. கொடிக்கம்ப மேடையில் அய்யாவின் படம் வைத்து கிளைத் தலை வர் கோ.தேவராஜ் மாலை அணிவித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சா.கிருட்டிணன் புதிய கழகக் கொடியை ஏற்றினார். செயலாளர் காந்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பொன்னமேடு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத் தலைவர் பொன்னமேடு கிளைக்கழகம் சார்பில் அய்யாவின் படத்திற்கு 17.9.2017 அன்று காலை 9 மணிக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி 139 ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner