எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, நவ.11 சிவகங்கை மண்டலத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணிகள் நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு:

இராமநாதபுரம்

சிவகங்கை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நவ. 5ஆம் நாள் காலை 11 மணிக்கு இராமநாதபுரம் நகர் மதுரை சாலையிலுள்ள ராணி இந்திராதேவி நகர் முன்னாள் மாவட்டத் தலைவர் பா.செயராமன் இல்லத்தில் மாவட்ட தலைவர் எம்.முருகேசன் தலை மையில், தலைமைச்செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி முன்னிலையில் நடை பெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் பா.செயராமன், மாவட்ட செயலாளர் கோ.வ.அண்ணாரவி, கயல் கணேசன், இரா.காமராசு, அ.கார்த்திக், முகவை பழ.அசோகன், ஏ.தேவசகாயம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நவ. 7 ஆம் நாள் மாலை 6 மணிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் உ.சுப்பையா இல்லத்தில் மாவட்ட தலைவர் காளாப்பூர் பெரு.இராசாராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி முன்னிலையில் நடந்தது.

சிவகங்கை உ.சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர் சுப.மணிமேகலை, மாவட்ட செயலாளர் ச.ஆனந்தவேல், அ.மகேந்திரராசன், ப.முத்துக்குமார், வைகை தமிழ்வாணன் ஆகி யோர் கலந்து கொண்டார்கள்.

தீர்மானம்

மூத்த தமிழறிஞர் சீரிய பகுத்தறிவாளருமான பேராசிரியர் மா.நன்னன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தலைமைக் கழ கம் ஒதுக்கியுள்ள விடுதலை நாளிதழ் சந்தா சேர்ப்புப் பணியை தீவிரமாக்கி இலக்கினை முடித்து வரும் நவ. 14ஆம் நாளன்று காரைக்குடி வரும் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்களிடம் வழங்குவதும், அதன்பிறகும் சந்தா சேர்ப்பினை தொடர்ந்து செய்து எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாளன்று ஈரோடு மாநகரில் நடைபெறவிருக்கும் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவிலும் தோழர்கள் பங்கேற்று விடு தலை சந்தாவும் வழங்குவது என முடிவு செய் யப்பட்டது.

காரைக்குடி மாவட்டத்தில்

ஒன்றிய கலந்துரையாடல்

கூட்டங்கள்

தேவக்கோட்டை

காரைக்குடி கழக மாவட்டம் தேவக் கோட்டை ஒன்றியத்தின் கழக கலந்துரையாடல் கூட்டம் நவ. 5ஆம் நாள் மாலை 6 மணிக்கு பேருந்து நிலையம் எதிரிலுள்ள மீனாட்சி வளா கத்தில், நகர கழக செயலாளர் வி.முத்தரசு பாண்டியன் தலைமையிலும், தலைமைச் செயற் குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி முன்னி லையிலும் நடந்தது.

மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், ஒன்றிய ப.க. அமைப்பாளர் அ.அரவரசன், ஒன்றிய ப.க. அமைப்பாளர் ந.தம்பிராசு, இளைஞரணி கழக அமைப்பாளர் பெரி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காளையார் கோவில்

காளையார்கோவில் ஒன்றியக் கலந்துரை யாடல் கூட்டம் நவ. 7 அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பெரியார் குணா காசன் இல்லத்தில் சாமி.திராவிடமணி தலை மையில் நடந்தது. மாவட்ட தலைவர் ச.அரங்க சாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, பெரியார் குணாகாசன், பெரியார் கமல்காசன், கு.கலைச்செல்வி, பா.இராஜ்குமார், ஜி.சுருதி இந்திரா, து.அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கழக நாளிதழ் விடுதலை சந்தா சேர்ப்புப் பணியை தீவிரப்படுத்தியும், வரும் நவ. 14 அன்று காரைக்குடி வரும் கழகச் செயல வைத் தலைவரிடம் வழங்குவதும், அடுத்து சந்தா சேர்ப்பினைத் தொடர்ந்து செய்து மீதமுள்ள சந்தாவை டிச. 2 இல் நடக்கும் ஈரோடு மாநகரில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று ஒப்படைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner