எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, நவ.12, வட சென்னை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் இன்று (12.11.2017 காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையிலும்,  பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

விடுதலை சந்தாக்களை விரைவில் சேர்த்து வருகிற 19ஆம் தேதி ஞாயிறு மாலை சந்தாக்களைத் திரட்ட வருகை தரும் பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திர சேகரனிடம் ஒப்படைப்பது என்று தீர் மானிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், வடசென்னை மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தலை மைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வட சென்னை மாவட்ட மகளி ரணிச் செயலாளர் ச.இன்பக்கனி, சி.வெற்றிச் செல்வி, சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, பெரி யார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன், மாவட்ட துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் சி.இரகுபதி, திருவொற்றி யூர் நகரச் செயலாளர் ந.இராசேந்திரன், செம்பியம் கழக தலைவர் ப.கோபால கிருட்டிணன், பெரம்பூர் கழக செயலாளர் ஆ.பாஸ்கர், புரசை பகுதி தலைவர் சு.அன்புச்செல்வன்,  புதுவண்ணை செய லாளர் சு.செல்வன், வியாசர்பாடி செய லாளர் கெடார் சு.மும்மூர்த்தி வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண் டியன்,   சொ.அன்பு, தி.செ.கணேசன், பா.பார்த்திபன், பெரியார்திடல் சோ.சுரேஷ், வை.கலையரசன், க.கலை மணி, கா.காரல் மார்க்சு மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

வடசென்னை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் வ.தமிழ்ச் செல்வன் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் முடி வடைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner