எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், நவ. 15   5.11.217 அன்று மாலை 5 மணியளவில் குடியாத்தம் புவனேசுவரி பேட் டை ஓவிஸ் பொலிவு  நிலை யத்தில் “அன்னை மணியம்மை யார் சிந்தனைக்களம் உருவாக்கம், “பெண் ஏன் அடிமையானாள் நூல்” பரப்புரை செய்யப்பட்டது.

திராவிடர் கழக மகளிர் பாசறை, மகளிரணி மற்றும் திராவிடர் கழகம் சாராத மகளிர் இணைந்து செயலாற்றும் “அன்னை மணியம்மையார் சிந்த னைக்களம்“ புதிய உறுப்பின ரோடு உருவாக்கம், முழுக்க பெண்கள் மட்டுமே உறுப்பி னர்களாக உள்ள இந்த சிந்தனை களத்தில் ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வது, மாதம் ஒரு தலைப் பில் உறுப்பினர்கள் பெண்கள் சம்பந்தமாகவும் பகுத்தறிவு கருத்துக்களையும், பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும் பரிமாறிக் கொள்வது சிந்தனைகளத்தின் நோக்கமாகும்.

பொறுப்பாளர்கள் நியமனம்

“அன்னை மணியம்மையார் சிந்தனைக்களத்தின்” தலைவராக வேலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ச.கலைவாணி நியமிக்கப்பட்டார், செயலாளராக சு.ரேவதி, கவுரவ தலைவராக மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, பொரு ளாளராக குடியாத்தம் மகளிர் பாசறை இர.உஷாநந்தினி, அமைப்பாளராக குடியாத்தம் மகளிர் பாசறை தலைவர் சி.லதா, துணைத்தலைவராக காயத்திரி, துணை செயலாளராக எம்.ரே ணுகா, ஒருங்கிணைப்பாளர்களாக ஆர்.சாந்தி, கே.பூங்கோதை ஆகியோர் நியமிக்கப்பட்டனர். “அன்னை மணியம்மையார் சிந்தனைக்களத்தில்” மொத்தம் 35 பெண்கள் உறுப்பினர்களாக உள் ளனர்.

குறும்படத்தின் மீது விவாதம்

இந்நிகழ்வில் ஆண்-பெண் சமத்துவம் குறித்தும் ஒரு குறும் படத்தின் மீதான விவாதமும் நடைபெற்றது. இதையொட்டி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் கூறிய சிந்த னைக்களம் உறுப்பினர்கள் பி.உமாராணி, எம்.ரேணுகா ஆகி யோருக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

“பெண் ஏன் அடிமையானாள்” நூல் பரப்புரை செய்யப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் “பெண் ஏன் அடிமையானாள்” நூல் வழங்கப்பட்டது. பரிசுகள் “பெண் ஏன் அடிமையானாள்” நூல் பரப்புரைக்கான செலவினை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.அன்பரசன் ஏற்றுக்கொண்டார்.