எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொண்டராம்பட்டு, நவ. 15 தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் தொண்டராம்பட்டு பெரி யார் பெருந்தொண்டர் வெ.உத்திராபதி - வாசுகி அவர்களின் மகன் உ.வீரமணி உரத்தநாடு வட்டம் தெலுங்கன் குடிக்காடு குருமண் தெரு அன்பழகன் -  சாந்தி இவர்களின் மகள்

அ.பிரதீபா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 30.10.2017 அன்று காலை 11 மணியளவில் தெலுங்கன்குடிக் காடு அம்மா திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

குரும்பன் தெரு தென்றல் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், பாப்பாநாடு தங்க பாஞ்சாலி மருத்துவமனை டாக்டர் த.காமராசு, ஒன்றிய திராவிடர் கழக தலைவர் மா.இராசப்பன், தொண் டராம்பட்டு மு.ஊ.தலைவர் கதிரவன், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அ.அருணகிரி, அதிமுக ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, மாநில ப.க. துணைத் தலைவர் வ.இளங் கோவன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொறுப்பாளர் கர்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னார்கள். இறுதியாக மண விழா விற்கு தலைமையேற்று வாழ்த் துரை வழங்கி கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களும் நாட்டமைப்பு தலை வர் வி.பி.தென்னவன் அவர்களும் மணவிழாவினை நடத்தி வைத் தனர். இறுதியாக பொறியாளர் அருண் நன்றி கூறினார்.

மணவிழாவில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி, உரத்தநாடு அதிமுக நகர செயலாளர் து.செல்வம், மாவட்ட கழக இணைச் செயலாளர் தி.வ. ஞானசிகாமணி, கண்ணுகுடி தண்டாயுதபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner