எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சுயமரியாதை இயக்கமும்- ஜாதி ஒழிப்பும்!

ஆவடி உண்மை வாசகர் வட்டத்தில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் உரை

ஆவடி, நவ.25 தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்றிருந்த காலத்தில் அந்த ஜாதி ஒழிப்புக்காக, சுயமரியாதை இயக்கம் 1929 இல் செங்கல்பட்டு மாநாட்டில் ஆதி திராவிடர்கள் பரிமாற, நாடார் சமையல் செய்ய அருமையான உணவு தயார் என்று அறிவிப்புச் செய்து மாநாடு நடத் தப்பட்டதை வழக்குரைஞர் சு.குமார தேவன் சுட்டிக்காட்டினார்

உண்மை வாசகர் வட்டத்தின் சார்பில் ஆவடியில் உள்ள பெரியார் மாளிகையில் மாதம் ஒருமுறை ஒரு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் 19-.11-.2017 ஞாயிறன்று சுய மரியாதை இயக்கமும் ஜாதி ஒழிப்பும் என்ற தலைப்பில் இந்த மாத நிகழ்வு ஒருங் கிணைக்கப்பட்டிருந்தது. இதில் வாசகர் வட்டத்தின் செயலாளர் கி.மு. திராவிடமணி அனைவரையும் வர வேற்றும், தலைவர் செந்துறை சா.இராசேந்திரன் தலைமையேற்றும் உரை யாற்றினர். நிகழ்வில் சென்னை மண்ட லச் செய லாளர் வெ.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் பா.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சுயமரியாதைத்

திருமணம்

தலைப்பை யொட்டிப் பேசிய வழக் குரைஞர் அவர்கள், தொடக்கத்தில் 1925 இல் சுயமரியாதை இயக்கம் தோன் றிய வரலாற்றை சுருக்கமாகக் கூறினார். அதைத்தொடர்ந்து சுயமரியாதை இயக் கத்தின் பல்வேறு பணிகளில் ஒன்றான 1926இல் சுக்லநத்தத்தில் நடைபெற்ற சுய மரியாதைத் திருமணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அதன் தொடர்ச்சியாக 1968 இல் அறிஞர் அண்ணாவின் ஆட்சி வரையிலும் அதன் வரலாற்றைச் சொல்லி, அது தமிழகமெங்கும் பரவி பண்பாட்டில் எப்படிப்பட்ட மாற்றங் களைச் செய்தது என்பதையும் தெளிவு படுத்தினார்.

ஆதிதிராவிடர்கள் பரிமாற - நாடார் சமையல்

1929 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டையும் ஜாதி ஒழிப்பில் அது காட்டிய தீவிரத்தையும், பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு என்றிருந்த காலத்தில் அதே செங்கல்பட்டு மாநாட்டில் ஆதிராவிடர்கள் பரிமாற, நாடார் சமையல் செய்ய அருமையான உணவு தயார் என்று அறிவிப்புச் செய்து மாநாடு நடத்தப்பட்டு அனைத்து ஜாதியி னரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ட புரட்சிகரமான வரலாற்றை நினைவுபடுத் தினார். தங்களை மனிதர்களாகக்கூட கருதாமல் பார்ப்பனரல்லாதார் அடி மைப்பட்டுக் கிடந்தபோது, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தின் விளைவாக ஏங்க நாங்களும் மனுசங்கதான்! எங்களுக்கு மட்டும் சுயமரியாதை இல்லையா? என்று அனைவருமே  அந்த அடிமைத் தளையிலிருந்து விலகியதோடு அதையே எதிர்த்து பேசத்தொடங்கியதையும் சுட் டிக்காட்டி, கெட்டிதட்டிப்போயிருந்த ஜாதியச்சுவர்கள் விரிசல் விட்டதற்கு சுயமரியாதை இயக்கத்தின் பணிகளின் ஆழமும், வீச்சும்தான் என்பதை தெள்ளத் தெளிவாகப் புரியவைத்தார். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம்தான் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பெயர்களைத் துறப்பது என்பது! இதன் தாக்கத்தாலேயே சுயமரியாதை இயக்கத்தின் வீச்சை தாங்க முடியாமல், நீடாமங்கலத்தில் காங்கிரசு மாநாடு ஒன்றைக்கூட்டி ஜமாபந்தி என்ற பெய ரில் போலியாக சமத்துவம் பேசியதைக் குறிப்பிட்டு,  சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் தேசிய கட்சிகளை எப்படி யெல்லாம் ஆட்டிப்படைத்திருக்கிறது என்பதை புரியவைத்தார். இந்த சூழலில் இந்தியாவில் அரசியல் விடுதலைக்காக அனைவரும் போராடிக்கொண்டிருந்த போது, சமூகவிடுதலைக்காக போராடியது சுயமரியாதை இயக்கம்தான் என்பது அவரின் உரையின் சாரமாக அமைந் திருந்தது.

கோவில் நுழைவுப்

போராட்டம்

மேலும் அவர் 1925இல் தொடங்கிய சுயமரியாதை இயக்கமானது அதற்குப் பிறகு திராவிடர் கழகமாக பெயர் மாறியிருந்தாலும்கூட, சுயமரியாதை இயக் கத்தின் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருவதற்கு ஆதாரமாக 1957 இல் நடை பெற்ற ஜாதிஒழிப்புக்காக அரசியல் சட்டத்தை எரித்த புரட்சிகரமான போராட்டத்தை எடுத்துரைத்தார். போலி யாக கோயில் நுழைவு நடத்திய மதுரை வைத்தியநாத அய்யருக்கு முன்பேயே, அதாவது 1928 இல் நடைபெற்ற கோயில் நுழைவுப்போராட்டம், நீடாமங்கலம் ஜாதிக்கொடுமையை சுயமரியாதை இயக்கம் எப்படிக் கையாண்டது? அதனால் இயக்கத்தின் மீதே வழக்கும் தொடுக்கப்பட்டது என்பதும், அந்தக் கொடுமைகளுக்காளான தாழ்த்தப்பட்ட மூவரையும் தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்திலேயே அழைத்துச் சென்றதையும் வரலாற்றில் இன்றைக்கும் பார்க்கும்படியாக பதிவுசெய்யப்பட்டிருக் கிறது என்பதை பேராசிரியர் திருநீல கண்டன் எழுதிய ‘‘நீடாமங்கலம் ஜாதிக் கொடுமையும் திராவிடர் இயக்கமும்'' என்ற புத்தகத்தில் ஏராளமான ஆதாரங் களைக் கொடுத்துள்ளதாகக்  கூறினார். இறுதியில் தந்தை பெரியார் கூறிய ‘‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு'' என் பதைக்கூறி உரையை நிறைவு செய்தார்.

நிகழ்வில் ஆவடி மாவட்டத்தின் செயலாளர் சிவக்குமார், அமைப்பாளர் உடுமலைவடிவேல், இளைஞரணித் தலை வர் கார்வேந்தன், உண்மை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் வை.கலையரசன், துணைத்தலைவர் பூவை செல்வி, செயலாளர் ஜெயந்தி, செயற்குழு உறுப்பினர்கள் கார்வேந்தன், இராவணன், கனிமொழி கலையரசன், பாக்யா கலைமணி மற்றும் திராவிடர் கழகம், விடுதலைசிறுத்தைகள் அமைப் புகளின் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner