எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சூளகிரி, நவ. 26 கிருட்டி ணகிரி மாவட்டம் சூளகிரியில் 23.11.2017 அன்று நீட் ஒழிப்பு கூட்டமைப்பு ---  ஓசூர் சார்பில் கூட்டமைப்பு தலைவர் வாசு தேவன் தலைமையில் திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தை கட்சி, சி.பி.எம். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, எஸ்.டி. பி.அய். கட்சி, தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஆகிய கட்சிகளை சார்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் நீட் எதிர்ப்பு போராளி அரியலூர் அனிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நீட் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கைகளை பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து நடை பெற்ற அனிதா நினைவேந்தல் கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர், மு.துக்காராம், மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன், ப.முனுசாமி, மாவட்ட அமைப் பாளர் திமுக சார்பில் வேப்பன பள்ளி சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன், முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன், ஓசூர் நகர திமுக செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், சூளகிரி ஒன்றிய செயலாளர் வெங் கடேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தை கட்சி, வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி செயலாளர் சம்பட்டி சிவா, சி.பி.எம். மாவட்ட குழு தலைவர் சுரேஷ், சிறீதர், நாகேஷ், எஸ்.டி.பி.அய். கட்சி மாவட்ட தலைவர் சாநவாஸ், தமிழ்நாடு - தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஓசூர் நகர தலைவர் ஆனந்த்குமார் ஆகியோர் நினை வேந்தல் உரை யாற்றினர்.

கூட்டமைப்பில் உள்ள அனைத்து தோழர்களும் திர ளாக கலந்து கொண்டனர்.