எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, டிச. 6- மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 85ஆவது பிறந்த நாள் விழா மும்பை தாராவி பகுதியில் உள்ள கலைஞர் மாளிகையில் 2.12.2017 அன்று மாலை 7 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது.

ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவுக்கு மும்பை கழக தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக மும்பை கழக செயலாளர் இ.அந்தோணி கடவுள் மறுப்புக்கூறி அனைவரையும் வரவேற்றார்.

மும்பை ப.க. தலைவர் அ.இர விச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார். மும்பை திமுக பொருளாளர் சா. பொன்னம்பலம், மும்பை துறைமுகம் பொறுப்பு கழக தொழிலாளர் நல ஆய்வாளர் ம.ஞானப்பிரகாசம், சோ.ஆசைத்தம்பி, என்.வி.சண்முகராசன், ஆ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மும்பை அ.கண்ணன், அ.இராதா கிருஷ்ணன், செல்வகுமார், தமிழ் காப்போம் அமைப்பின் பொறுப்பாளர் இறை சா.இராசேந்திரன், ஜெய்பீம் அறக்கட்டளை பொறுப்பாளர் இராஜா குட்டி, மராத்திய மாநில திமுக இளை ஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், புறநகர் திமுக இலக்கிய அணி செயலாளர் வ.இரா.தமிழ் நேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி கிளைச் செயலாளர் ஞான.அய்யா பிள்ளை, திருவள்ளுவர் நற் பணி இயக்க நிறுவனர் ந.இராதா கிருஷ்ணன், திமுக தோழர் கா.இரா ஜன் உரைக்குப்பின் "தமிழ் லெமூரியா" திங்களிதழ் ஆசிரி யர் சு.குமணராசன் சிறப்புரையாற்றி னார். அவர் தமது உரையில்: ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பு, பெரியாரை உலகமயமாக்கும் செயல், தொடர்ந்து சுற்றுப்பயணம், எழுத்துப் பணி போன்றவற்றை சுமார் ஒரு மணி நேரம் அருமையாக எடுத்து வைத்தார். இறுதியில் மும்பை கழக துணைச் செயலாளர் ஜெ.வில்சன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் மு.கணேசன், செ.ரொபின், நித்தியானந்தம், சுரேஷ் குமார் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி தேநீர் வழங்கப்பட்டது. ஆசிரியர் பிறந்த நாள் சுவரொட்டிகள் நகர் முழுக்க ஒட்டப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner