எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் பெருந்தொண்டர் ஆ.முனுசாமி இல்ல மணவிழா

கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்

மணலூர்பேட்டை, டிச. 9 30.11.2017 அன்று மணலூர்பேட் டையில் எஸ்.ஆர்.எம். திருமண மண்டபத்தில் முதுபெரும் பெரி யார் பெருந்தொண்டர் ஆ.முனு சாமி அவர்களின் இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழாவை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

தேவரடியார்குப்பம் மு.இளங் கோவன் - துர்காம்பாள் இவர்களின் மகன் இ.பிரபாகரன், விருத்தா சலம் -சாத்தப்பாடி, ஜி.கொளஞ்சிநாதன் - -- சிவலட்சுமி இவர்களின் மகள் கொ.அஞ்சு, ஆகிய இரு வருக்கும் நடத்திவைக்கப்பட்ட வாழ்க்கை இணை ஏற்பு விழா விற்கு மு.இளங்கோவன் வரவேற் புரையாற்றினார். மணலூர் பேட்டை நகர கழக.தலைவர், சி. அய்யனார், கோ.இளங்கோவன் (பிணீதீமீக்ஷீt ணிஸீஸ்வீக்ஷீஷீ சிணீக்ஷீமீ ஷிஹ்stமீனீ லிtபீ.), முருக்கம்பாடி கிளைக்கழக தலை வர் எம்.கணபதி, பொதுக்குழு உறுப்பினர் தி.பாலன், திருக்கோயிலூர் ஒன்றிய கழக தலைவர், கருப்புச்சட்டை நா.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக தலைவர் ம.சுப்ப ராயன் தொடக்க உரை ஆற்றினார்.

திராவிட கழக பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமை ஏற்று தந்தை பெரியார் வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த உறுதிமொழி கூறி, திருமணத்தை நடத்தி வைத்து எழுச்சி உரை ஆற்றினார். அவர் தனது உரையில், "மனுதர்ம சாத்திரப்படி நமக்கெல்லாம் திருமணம் செய்துகொள்ள உரி மையில்லை. பார்ப்பானுக்கு மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது. அதனால் தான் மணமகனுக்கு பூணூல் அணிவித்து பார்ப்பா னாக்கி திருமணம் செய்து வைக்கிறான். மேலும் யாகம் என்கிற பெயரில் தீ மூட்டி அதில் பொரி மற்றும் நெய் போன்ற பொருள்களை கொட்டி புகையை கிளப்பி, மணமக்களையும் மற்றும் உள்ள உறவினர்களையும் திக்குமுக்காடச்செய்து, இல்லாத முப்பத்து முக்கோடி தேவர்களை சாட்சியாக வைத்து, நமக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரம் ஓதி திருமணம் செய்து வைக்கிறான். அவனுக்கு தட்ச ணையாக பணமும், துணிமணி களும், அரிசி, காய்கறி போன்ற வையும் கொடுக்கிறோம். ஒன் றிரண்டு மணி நேரமே உடலு ழைப்பு இல்லாமல் வேலை செய்யும் பார்ப்பானுக்கு இவ்வள வும் கொடுக்கிறோம். பார்ப் பானை வைத்து நாம் திருமணம் செய்து கொள்வதனால் சூத்திரப் பட்டத்தை நமக்கு நிலையானதாக ஆக்கிக் கொள்கிறோம். இதை யெல்லாம் நாம் சிந்தித்து பெரி யார் வகுத்துத்தந்த சுயமரியாதை திருமணத்தை செய்து கொள்ள வேண்டும்.

சுயமரியாதை திருமணத்தில் கணவனும் மனைவியும் உற்ற நண்பர்கள். வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில், சமபங் கேற்பவர்கள். கணவன், மனைவியிடமிருந்து என்னென்ன உரி மைகளை எதிர்பார்க்கிறாரோ, அதே அளவு உரிமைகளை கண வனிடமிருந்து மனைவி எதிர் பார்க்க உரிமை உண்டு. ஆகை யால் பெரியாரின் சுயமரியாதை திருமணத்தை தமிழர் ஒவ் வொருவரும் செய்ய முன்வர வேண்டும்" என்று கூறி முடித்தார்.

இவ்விழாவில் கல்லக்குறிச்சி மாவட்ட கழக அமைப்பாளர் த.பெரியசாமி, வடகரை தாழனூர் கிளைக்கழக தலைவர் மு.சேகர், சாங்கியம் வீ.ஞானம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.கரிகாலன், முருக்கம்பாடி கிளைக்கழக தலைவர் எம்.கணபதி, திருவரங்கம் கிளைக் கழக தலைவர் பரமசிவம் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னார்கள். வாழ்க்கை இணை ஏற்பு விழாவில் மணமக்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். எஸ்.மதியழகன் (கண்காணிப் பாளர் முப்படை வீரநல அலு வலகம், நாகப்பட்டினம்) நன்றி கூற வாழ்க்கை இணை ஏற்பு விழா இனிதே முடிந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner