எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிதம்பரம், டிச. 11 சிதம்பரம் நகர திராவிடர் கழக முன்னாள் தலைவரும், கழகப் பொதுக்குழு உறுப்பினருமான புலவர் சி.இராசாங்கம் நினை வேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி மஞ்சக்கொல்லை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் புல வர் அமிர்தலிங்கம் தலைமை யில் 7.12.2017 அன்று காலை 11 மணியளவில் சிதம்பரம் மன்மதசாமி திருமண மண்ட பத்தில் நடந்தது. முன்னாள் கவுன்சிலர் பி.கே.அருள் வர வேற்புரையாற்றினார். முன் னாள் மாவட்ட கழக தலைவர் ஜெ.கி.அருள்ராஜ், நகர கழக செயலாளர் இரா.செல்வரத் தினம் முன்னிலை வகித்தனர்.

93 வயதான மறைந்த புலவரின் படத்தினை திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் நினைவுரையாற் றினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் டி.செல்வராசு, பெரியார் பெருந்தொண்டர் கோவி.சுந்தரமூர்த்தி, திமுக முன்னாள் மாவட்ட மாண வரணி அமைப்பாளர் முரு கேசன், மஞ்சக்கொல்லை ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அறு.கலைச் செல்வன் ஆகியோர் நினை வுரை ஆற்றினர்.

புவனகிரி கணபதி, ஆசீர் வாதம், மாவட்ட கழக அமைப் பாளர் கு.தென்னவன், கழக பேச்சாளர் யாழ்திலீபன், மண் டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன் ஆகியோர் நிகழ் வில் பங்கேற்றனர். முடிவில் ஆர்.அன்பரசன் நன்றி கூறினார்.

கழகத்தின் சார்பில் அம்மை யார் பிச்சையம்மாள் ராசாங்கம், மகன்கள் இரா.அன்பரசன், இரா.பொய்யாமொழி, இரா. நச்சினார்க்கினியன் ஆகியோ ருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட் டது. அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் வீரவணக்கம் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner