எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தவுட்டுப்பாளையம், டிச. 11 கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்  தவுட்டுப் பாளையத்தில் மாவட்ட தலை வர்  ப குமாரசாமி தலைமை யில் மாவட்ட அலுவலகம் முன்பு கழகக் கொடியினை, சிறப்பு அழைப்பாளராக  பெரி யார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர்  பொத் தனூர் க.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு கழகக் கொடியேற்றி வைத்தார்.

கழக அலுவலகத்தில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று கீழ் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

1) 2.-12.20-17அன்று  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், முப் பெரும் விழாவும் நடை பெற் றது. விழாவில் கரூர் மாவட் டம் சார்பில் விடுதலை சந்தாக்கள் வழங்க துணை புரிந்த மாவட்ட கழக தோழர் களுக்கு மாவட்ட கழகம் நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறது.

2) எதிர்வரும் 24ஆம் தேதி பெரியார் நினைவு நாளில் விடுதலை நாளிதழ் சந்தாக்கள் இன்னும் கூடுதலாக வழங்க முயற்சி மேற்கொள்வது என வும், அதே போல் உண்மை, பெரியார் பிஞ்சு,மாடர்ன் ரேசனலிஸ்ட், சந்தாக்கள் சேர்க்க உழைப்பது எனவும் தீர்மானக்கப்படுகிறது.

3) இன்று கரூர் தவுட்டுப் பாளையத்திற்கு வருகை தந்த சுயமரியாதை பிரச்சார நிறுவ னம் தலைவர்  பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் கழக கொடியேற்றி, கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தற்காக நன்றியும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள் கிறோம் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள், கவிஞர் பழ. இராமசாமி,

சே. அன்பு, மாநில கழக வழக் குரைஞரணி துணைத் தலைவர் மு.க. இராஜசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள், வே. ராஜூ, தி செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவர் சி.ராஜாமணி, பகுத்தறிவாளர் கழக தலைவர் த.சி. அக்பர், கரூர் நகர தலைவர் க.நா சதாசிவம், நகர செயலாளர் ம. சதாசிவம், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தே. அலெக்ஸ், செயலாளர் ம. ஜெகநாதன், அமைப்பாளர் காந்திகிராமம் ச.ராஜா, மா. கணேசன் தாந்தோனி செயலாளர், பழனிச்சாமி நாணப்பரப்பு ஒன்றிய  செய லாளர், கட்டளை உ. வைரவன் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர், இரா கிருஷ்ணன், கரூர் ஒன்றிய தலைவர், ஆ.கவு தமன் நகர துணை தலைவர், அ. பெருமாள், காளிபாளையம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர், பெ. விடுதலை, கவுரி சேரன், ஜி.ஜி. பகலவன், எல். இளங்கோவன், தமிழ் செல்வன், விஜயகுமார், அறிவ ழகன், டி. குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நன்றியுரை த.சி. அக்பர் வழங் கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner