எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, டிச. 14 தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85ஆவது பிறந்த நாள் சிறப்புக்கூட்டம் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் 10.12.2017 அன்று மாலை 6 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் மாவட்ட ப.க. துணைச் செயலாளர் ராஜூ பாடல்கள் பாடி சிறப்பித்தார். உரத்தநாடு ஒன்றிய ப.க. தலைவர் கு.நேரு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் தொடக்க உரையாற்றினார். மாநில ப.க. துணைத் தலைவர் வ.இளங்கோவன், மாநில ப.க. பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலையேற்று உரையாற்றி னார்கள். தொடர்ந்து மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன், கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.இராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் கோ.உதய குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஞ்சையின் மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ.இராமமூர்த்தி தலைமையுரையாற்றினார். தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோபு.பழனிவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆ.வந்தியதேவன் உரை

இறுதியாக "அய்யாவின் அடிச்சுவட்டில்... ஆசிரியர்" என்னும் தலைப்பில் மதிமுக மாநில அமைப்புச் செயலாளர் ஆ.வந்திய தேவன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்: தந்தை பெரியார் காலத்தில் தந்தை பெரியாரிடம் பணியாற்றிய தலை வர்கள் கழக பொறுப்பாளர்களையெல்லாம் பட்டியலிட்டு அனைவரும் சிறப்புக்குரி யவர்கள்தான். ஆனால், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைத்தான் கழகத்தின் பொதுச் செயலாளராக பெரியார் அவர்கள் நியமித் தார்கள். 10 வயதிலேயே பொதுக்கூட்டத்தில் அல்ல. மாநாடுகளில் திறப்பாளர், கொடி யேற்றுதல் தீர்மானத்தை வழிமொழிந்து, முன்மொழிந்து உரையாற்றுதல் என யாருக் கும் கிடைக்காத வாய்ப்புகளும், பெருமை களும் பெற்ற ஒரே தலைவர் ஆசிரியர் அவர்கள், 85ஆம் வயதிலும் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். தமிழகத்தின் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாது காவலராக திகழ்வதுடன் அனைத்து இயக்கங் களையும் உரிமை பிரச்சினைகளுக்காக ஒன்றிணைத்து போராடும் வல்லமையோடு களம் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளில் அவரை வாழ்த்தி 100 ஆண்டு கள் கடந்து இந்த சமுதாயத்திற்கு தொண் டாற்ற நமது விருப்பத்தை தெரிவித்து உரையை நிறைவு செய்கிறேன் என கூறினார்.

பங்கேற்றோர்

நிகழ்வில் திருக்குறள் சோமசுந்தரம், விசிறிசாமியார் முருகன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் தங்க.வெற்றிவேந்தன், மாவட்ட ப.க. தலைவர் ந.காமராசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் ச.அழகிரி, மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், மாவட்ட இளை ஞரணி தலைவர் அ.தனபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக் குமார், மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், யோகா மாஸ்டர் மல்லிகா, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.இரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், ச.மணியன், மாநகர ப.க. செயலாளர் லெட்சுமணசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மணி கண்டன், ஆசிரியர் பொற்கோவன், நெல்லுப் பட்டு இராமலிங்கம், மன்னை சித்து, குடந்தை மாவட்ட துணைத் தலைவர் வலங்கை கோவிந்தன், அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் காத்தையன், அமைப் பாளர் தமிழ்செல்வன், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராய ணசாமி, அம்மன் பேட்டை கலியபெருமாள், திராவிட இயக்க தமிழர் பேரவை பொறுப் பாளர் செல்ல கலைவாணன், திருவையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், செயலாளர் துரை.ஸ்டாலின், பெரியார் பெருந்தொண்டர் கண்ணுக்குடி தண்டாயுதபாணி, கரந்தை டேவிட், படிப்பக வாசகர் முருகானந்தம், சூரியமூர்த்தி, மாநகர மாணவரணி துணைச் செயலாளர் சரவணன், நாத்திகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின பகுத்தறிவாளர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்

பா.இளங்கோ நன்றி கூற நிகழ்வு முடிவுற்றது.