எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, டிச. 15 கோவை, வடகோவை, மருதம்  குடியி ருப்பு வளாகத்தில் 13-.12.-2017 அன்று காலை 11 மணியளவில் பெரியார் பெருந் தொண்டர் மருத்துவர் நாச்சியப்பன் அவர் களின் முதலாமாண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நினைவேந்தல் நிகழ் வில் தலைமை கழகப் பேச் சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் பேசுகையில்:

மருத்துவர் நாச்சியப்பன், அவருடைய துணைவியார் சுப்புலட்சுமி  மற்றும் அவரது  செல்வங்கள் இன்றைக்கும், என்றைக்கும் தந்தை பெரி யாரின் கொள்கைக்கு தோன் றாத் துணையாக இருக்கின் றார்கள். மருத்துவர் நாச்சி யப்பன் படமல்ல.... பாடம், கொள்கை, தத்துவம் என பெருமிதமாய் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் ராமச்சந்திரன், ம.ந.க வீதி கண் ணன், ஓய்வு பெற்ற தொழி லாளர் நலத்துறை இணை இயக்குநர் முனியாண்டி,  மண்டல செயலாளர் சந்திர சேகர், திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் பழ. அன்பரசு,  தமிழ் முரசு, திராவிடர் கழக மகளிர் அணியைச் சேர்ந்த தோழியர்கள் முத்துமணி, கலைச் செல்வி, கவிதா, ஜோதி, தங்கமணி, தேவிகா ஆகியோர் மற்றும் திமுக, தி.க. நிர்வாகிகளும், மருத்துவர் நாச் சியப்பன் அவர்களின் குடும்பத் தினரும், அவருடன் பணியாற் றியவர்களும்  கலந்து கொண் டனர்.

நன்கொடை

மருத்துவர் அவர்களின் குடும்பத்தினர் சார்பாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு பத்தாயிரம் ரூபாயும் 2 ஆண்டுகள் 'விடுதலை' சந்தாக் களும் வழங்கப்பட்டன. உடன் கண்ணன் அவர்களின் சார்பாக வும் 'விடுதலை' சந்தாவும் வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner