எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முள்ளூர், டிச. 18 சிங் கப்பூரில், முன்னாள் திராவிடர் கழக பொறுப்பாளர் பெ.ரெ.வீராச்சாமி (வயது 82) அவர் கள் கடந்த மாதம் 26.11.2017 அன்று மறைவுற்றார்கள்.

அவரின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 10.12.2017 அன்று மாலை 6.30 மணிக்கு முள்ளூர் பட்டிக்காட்டில் நடை பெற்றது.   பட்டுக்கோட்டை கழக மாவட்டச் செயலாளர் பெ.வீரையன் தலைமையில் தஞ்சை வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்கள் பெ.ரெ.வீராச்சாமி அவர்களின் படத்தினை திறந்து வைத்து  நினைவேந்தல் உரையாற்றி னார். திராவிடர் கழக பேச்சாளர் இராம.அன்பழகன், பட்டுக் கோட்டை நகரத் தலைவர் அ.காளிதாசன், மாவட்ட வழக் குரைஞர் அணித் தலைவர் அ.அண்ணாத்துரை, திமுக ஒன் றிய செயலாளர் ஆர்.இளங்கோ, சி.நேதாஜி, முன்னாள் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வழக்குரைஞர் உரத்தநாடு கோவிந்தராசு, அ.வெங்கடேஸ் வரன், பொதுவுடைமை இயக் கத்தை சேர்ந்த ஆம்பல் கல் யாணசுந்தரம் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர். பின்னர் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வீராச்சாமி அவர்களின் வாழ் விணையர்கள் வீ.ராஜம்மாள், வீ.இலஞ்சியம், பகுத்தறிவாளர் கழகம், திமுக ஒன்றிய இலக் கிய அணி துணை அமைப்பாளர் வீ.அரங்கநாதன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மதுக்கூர் ஒன் றிய கழகத் தலைவர் க.ஜோதி, மாவட்ட துணைத் தலைவர் பட்டுக்கோட்டை சா.சின்னக் கண்ணு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வீ.வீரமணி மற்றும் திமுக அனைத்துக்கட்சி தோழர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner