எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, டிச. 18 4.-12.2017 அன்று பெரியார் தொடக்கப் பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இனிதே நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தலை மையாசிரியை ப.விஜயலெட் சுமி தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியை க.மல் லிகா வரவேற்புரை ஆற்றினார்.

தலைமையாசிரியை தமது தொடக்க உரையில்: பள்ளியின் தோற்றம், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகி யோரின் தொண்டறப்பணிகள் பற்றிக் கூறினார்.

தொடர்ந்து இடைநிலை ஆசிரியைஅ.அரும் பொற் செல்வி உரையாற்றுகையில்: பெண்கல்வி பெண்கள் முன் னேற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு தழிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் சமூகநீதிப்பணி ஆகியவற்றைப் பற்றி கூறினார்.

மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, தந்தை பெரியாரின் பொன்மொழிகள், தமிழர் தலைவரின் பொன் மொழிகள் ஓப்புவித்தல் போட்டி ஆகியன நடத்தப்பட்டன.16-.12.20-17 அன்று மேட்டூர் மாவட்டம்... 'பெண் ஏன் அடிமை யானாள்' நூல் விற்பனைத் தொகை,  பழனி. புள்ளையண்ணன்,  சிந்தாமணியூர் சுப்பிரமணியன்,  கிருட்டிணமூர்த்தி,  கோவி.அன்புமதி, ஆகியோரிடமிருந்து  100 புத்தகங் களுக்கு உரிய தொகையை பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி பெற்றுக் கொண்டார்.