எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், டிச. 18- மேனாள் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை இரா.இராசகோபால் தஞ்சையில் நடத்தி வந்த ராணி உணவு விடுதி இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் ராணி உணவு விடுதி திறப்பு விழா கடந்த 16ஆம் தேதி சனியன்று நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார்.

தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளராகவும், தஞ்சை வட்ட திரா விடர் கழகத் தலைவராகவும் விளங்கி தீவிரமான முறையில் இயக்கப்பணி ஆற்றி வந்த தஞ்சை இரா.இராசகோபால் அவர்களை அறிந்திராத இயக்கத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. இயக்கத்திற்கு அப்பாற்பட்ட பொது மக்கள் மத்தியிலும் தஞ்சை இராசகோபால் என்ற பெயர் மிகவும் நெருக்கமாக அறிமுகமான பெயரே!

தஞ்சாவூர் ரயில்சந்திப்புக்கு வெளியே நின்று பார்த்தால் அந்த ராணி உணவகம் பளிச்சென்று தெரியும். எப் பொழுது பார்த்தாலும் நான்கு கருப்புச் சட்டைத் தோழர்கள் அந்தக் கடைவாச லில் நின்று கொண்டே இருப்பார்கள். தஞ்சையில் மூன்று இடங்களில் ராணி உணவகத்தை நடத்தி வந்தார். ராணி உணவகம் என்ற பெயர் பரவலாக அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. அவரின் மறைவுக்குப் பிறகு உணவகம் நிறுத்தப்பட்டு, அதே இடத்திலேயே அவரது மகன் ஜெயபால் அவர்களால் ஆர்.ஆர்.மளிகை நடத்தப்பட்டு வந்தது.

அவர் மறைவிற்குப் பிறகு அவரது மருமகன்கள் வழக்குரைஞர் இரா.சரவணக்குமார் எம்.ஏ.பி.எல். அவரது தம்பி இரா.வீரக்குமார் பி.காம். (இரு வருமே திராவிடர் கழகத்தினர்) ஆகி யோர் மறைந்த ஜெயபால் அவர்களின் வாழ்விணையரும், தஞ்சை மாநகர மன்ற மேனாள் தலைவருமான தேன் மொழி ஜெயபால் அவர்களின் முயற்சி யாலும் அதே இடத்தில் மீண்டும் “ராணி உணவகம்“ திறப்பு விழா 16.12.2017 சனியன்று காலை 11 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக் கப்பட்டது.

தமிழர் தலைவர் திறந்து

வைத்து வாழ்த்துரை

உணவகத்தைத் திறந்து வைத்து திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தஞ்சை இராசகோபால் அவர்கள் நடத்தி வந்த ராணி உணவகம் இந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஒன்றாகும். பொதுவான மரக்கறி  உணவகங்களில் காபி நன்றாக இருக்கும். புலால் உண வகங்களில் டீ நன்றாக இருக்கும் என் பார்கள். ஆனால் ராணி உணவகத்தில் காபி மிகவும் சுவையாக இருக்கும். இரு வகை உணவும் தரமாகவே இருக் கும்.

இங்கு கூட சைவ உணவு, அசைவ உணவு கிடைக்கும் என்று எழுதி வைத் துள்ளனர். அதில் என்ன சைவ உணவு? வைணவ உணவு-? மரக்கறி உணவு, புலால் உணவு என்று எழுதலாமே!

தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் அவர்கள் இந்தப் பகுதிக்கு வரும் பொழுதுதெல்லாம் வாகனத்தை இங்கு நிறுத்தி, இராச கோபால் அவர்கள் நடத்தி வந்த இராணி உணவகத்தின் உணவினைச் சாப்பிட்டு உரையாடி விடை பெற்றுச் செல்வார்கள்.

கடையின் கல்லாவில் பெரும்பாலும் கடை உரிமையாளரைப் பார்க்க முடி யாது. கழகத் தோழர்கள்தான் அங்கு உட்கார்ந்து இருப்பார்கள். நானே கூட அப்படி உட்கார்ந்திருந்தது உண்டு.

இப்பொழுது இராணி உணவகத்தை மீண்டும் திறந்துள்ளவர்கள் அவ்வாறு இல்லாமல், உரிமையாளரே கல்லாவில் உட்கார வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல தரமான வகையில் ஆரோக்கியமான வகையில் உணவி னைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். அதில் சமரசம் கூடவே கூடாது. கொள் கையில் சமரசம் கூடாது என்பது போல், தரத்திலும் சமரசம் கூடாது என்று கூறி நிறுவனம் சிறப்பாக வளர்ந்தோங்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

மேனாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

மேனாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் அவர்கள் வாழ்த்திப் பேசும் போது குறிப்பிட்டதாவது:

இந்த இராணி உணவகம் திராவிடர் இயக்கத் தோழர்களுக்கு ஒரு தாய்வீடு போல இருந்தது. நாங்கள் எல்லாம் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா வுக்குச் சென்று திரும்பும்போது இங்கு வந்து தேநீர் அருந்திச் செல்வதை ஒரு வாடிக்கையாக, வழக்கமாகக் கொண்டி ருந்தோம். மறுபடியும் ராணி உணவகம் திறக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது என்று குறிப்பிட்டார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரையாற்றுகையில், எதிரே ஒரு ரயில் சந்திப்பு நிலையம் இருந்தது. அது தஞ்சாவூர் இரயில் சந் திப்பு. அந்த சந்திப்புக்கு எதிரே உள்ள ராணி உணவகம் என்பது கழகத் தோழர் களின் சந்திப்புக்கான பாசறையாகும் என்று குறிப்பிட்டார்.

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் தலைவரும், ஜெயபால் தேன்மொழி அவர்களின் மருமகனுமான இரா.சரவணக்குமார் தொடக்கத்தில் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். உணவக உரி மையாளர் இரா.வீரக்குமார் நன்றி கூறினார்.

அனைவருக்கும் மதியம் பிரியாணி விருந்தளித்து உபசரிக்கப்பட்டது.

பங்கேற்றோர்

திமுக முன்னாள் அமைச்சர் உபய துல்லா, முன்னாள் மாநகராட்சி உறுப்பி னர் மேத்தா வீரையன், மாவட்ட திமுக மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங் கலம் பாலு, தருமராசன், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மண்டல தலைவர் வே.ஜெயராமன், மண்டல செயலாளர் அய்யனார், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், உரத்தநாடு பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஷேக்தாவூது முதலியோர் இந்நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner