எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலக நாத்திகர் மாநாட்டில்

அதிக அளவில் பங்கேற்க முடிவு

நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

பொத்தனூர், ஜன.4 நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் பொத்தனூர் பழனியாண்டி செண் பகவள்ளி திருமண மண்டபத்தில் தந்தை பெரியார் 44ஆவது நினைவு நாளான 24.12.2017 அன்று மாலை 4 மணியளவில் நடை பெற்றது.

பெரியார் சுயமரியாதை பிரச் சார நிறுவனத் தலைவர் பொத் தனூர் க.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் ஆ.கு.குமார், செயலாளர் வை.பெரியசாமி முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்தில் திருச்சி உலக நாத்திகர் மாநாட்டில் பங் கேற்பது, விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழ்களுக்கு சந் தாக்கள் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் வழக் குரைஞர் ப.இளங்கோவன், செய லாளர் ப.சம்பத், மாவட்ட துணை செயலாளர் மு.சிறீதர், பொத்தனூர் பகுத்தறிவாளர் கழக தலைவர் வீர.முருகன், துணைத் தலைவர் கே.சந்திரசேகரன், செய லாளர் ராஜசேகர், துணை செய லாளர் அன்புமணி, பொருளாளர் வீர மணி, வேலூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முத்து.கண்ணன், செயலாளர் அறிவாயுதம், பொரு ளாளர் தமிழரசன் ஆகியோ ருடன் சிறப்பு அழைப்பாளர் இந்திய கணசங்க கட்சித் தலைவர் நீதிசரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner