எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கன்னியாகுமரி, ஜன.4 கன்னி யாகுமரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 1.1.2018 அன்று நாகர்கோவில் பெரியார் மய்யத்தில்  நடந்தது. மாவட்ட  பகுத்தறிவாளர் கழக  செயலாளர்  பெரியார்  தாஸ்  வரவேற்றுப் பேசினார்.  மாவட்ட  கழக  துணை  தலைவர்   பன்னீர் செல்வம்  தலைமை தாங்கினார்.   மாவட்ட திராவிடர் கழக  செய லாளர்  கிருஷ்ணேஸ்வரி  முன் னிலை வகித்தார்.

திருநெல்வேலி  மண்டல  செயலாளர்  கோ.வெற்றி வேந் தன், பகுத்தறிவாளர் கழக மாநில  துணைத்தலைவர்  குருசாமி  ஆகியோர்  கருத்துரை ஆற்றினர்.  கழக  தோழர்கள்  சுப்பிரமணியம், செல்லையா, கவிஞர்  செய்க்  முகமது  மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.  அய்சக் நியூட்டன்  நன்றி  கூறினார்.

ஜனவரி 5, 6, 7 இல் திருச்சியில் நடக்க இருக்கும் உலக  நாத்திகர் மாநாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  இருந்து ஏராள மான  தோழர்கள்   கலந்து கொள்ள வேண்டும் என்று  தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.