எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செயங்கொண்டத்தில் சமூகநீதி மாநாடு

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம்

அரியலூர் கலந்துரையாடலில் முடிவு

செயங்கொண்டம், ஜன. 4 அரியலூர் மாவட்டம் செயங் கொண்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் சமூகநீதி மாநாடு நடைபெறவுள்ளது.

சமூகநீதி மாநாட்டு ஏற் பாடுகள் குறித்த அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் 23.12.2017 அன்று மாலை 5 மணிக்கு தொடங்கி நடை பெற்றது. செயங்கொண்டம் எழில் டயர் வணிக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மண்டல தலைவர் சி.காமராஜ், மண்டல செயலாளர் சு.மணி வண்ணன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மாநில இ.அ.செயலாளர் த.சீ.இளந்தி ரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் நோக் கங்கள் குறித்த கழகப்பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தொடக்கவுரையாற் றினார்.

மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டிய அவசியம் குறித்தும், ஆற்ற வேண்டிய அவசியம் குறித்தும், ஆற்ற வேண்டிய பணிகள், திரட்ட வேண்டிய நன்கொடைகள் குறித்தும் எடுத் துக்கூறி கழகப்பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை யாற்றினார்.

பங்கேற்றோர்

செயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி ஒன்றிய செயலாளர் துரை.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி. கலியமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், மாவட்ட இ.அ. தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இ.அ.செயலாளர் க.கார்த்திகேயன், தா.பழுர் ஒன் றிய தலைவர் சொ.மகாலிங்கம், செயலாளர் பி.வெங்கடாசலம், அமைப்பாளர் சி.தமிழ்சேகரன், அண்ணங்காரன்பேட்டை முருகன், இளங்கோவன், மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவமூர்த்தி, நகர தலைவர் வை.செல்வராஜ், செயலாளர் கே.எம்.சேகர், மாவட்ட இ.அ.து. தலைவர் ச.அறிவன், ஆண்டி மடம் ஒன்றிய இ.அ.தலைவர் க.செந்தில், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் சு.கலை வாணன், செந்துறை செந்தில் குமார், கவுதமன், தஞ்சை மாவட்ட இ.அ.செயலாளர் ராஜ வேல், வழக்குரைஞர் ம.திராவிட அரசு, செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், ஒன்றிய செயலாளர் மு.முத்தமிழ்ச் செல்வன், அமைப்பாளர் வெ.இளவரசன், செயங்கொண்டம் கா.பெரியார் செல்வன், அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபால கிருட்டிணன், அமைப்பாளர் ந.செல்லமுத்து, அரியலூர் நகர தலைவர் இரா.கோவிந்தராஜன், அண்ணாத்துரை உள்ளிட்டகழகப் பொறுப்பாளர்கள் நிகழ்வில் பங்கேற்று கருத்துக்களை எடுத்து ரைத்தும், நிதியளித்தும், நிதி திரட்ட உறுதி கூறியும் சிறப் பித்தனர்.

தீர்மானங்கள்

1) “முதுமை என்னை முற்று கையிட்டாலும் என்னை உயிர்ப் புடன் வைத்திருப்பது தமிழும், பெரியாரும்” என்று சொன்ன பேரா.நன்னன், செயங்கொண்டம் -_ அண்ணங்காரன்பேட்டை சட்ட எரிப்பு வீரர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

2) ஜனவரி 2018ஆம் ஆண்டு 5, 6, 7 தேதிகளில் திருச்சியில் நடை பெற வுள்ள உலக நாத்திகர் மாநாட் டிற்கு கழகத் தோழர்கள் அனைவரும் தனி வாகனங்களில் சென்று பங்கேற்பதென முடிவு செய்யப்படுகிறது.

3) செயங்கொண்டத்தில் சமூகநீதி மாநாடு நடத்திட அனு மதியளித்த தமிழர் தலைவருக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. ஜனவரி 21ஆம் தேதி (21.1.2018) செயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் மாநாட் டினை மிகுந்த எழுச்சியோடும், சிறப்போடும் நடத்திடுவதெ னவும், மாநாட்டினை விளம்பரப் படுத்திடும் வகையில் மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரம் செய்வதெனவும் முடிவு செய்யப் படுகிறது.

4) தந்தை பெரியார் தத்து வத்தை தரணியெங்கும் பரப் பிடும் தமிழர் தலைவருக்கு எடைக்குஎடை நாணயம், விடு தலை சந்தா, 85 விதமான பொருட் களை அளித்திடுவதெனவும், கழகப் பொறுப்பா ளர்கள் குடும் பம் குடும்பமாக பங்கேற்ப தெனவும் திராவிடர் எழுச்சி ஊர் வலத்தை சிறப்பாக நடத்திடவும் தீர்மானிக்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner