எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்கால், ஜன. 6 புதுவை மாநில நீட் எதிர்ப்பு நடவடிக் கைக்குழு சார்பில் நீட் எதிர்ப்பு விளக்க கருத்தரங்கம் காரைக்கால் சாந்தம் அரங்கத்தில் திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமையில் 31.12.2017 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

புதுச்சேரி மாணவர் கூட்ட மைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமி நாதன் வரவேற்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கீதநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை பேராசிரியர் உ.பிரபாகரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

நீட் தேர்வினை ஏன் எதிர்க் கிறோம், அதனால் ஏற்படும் கேடுபாடுகள், குளறுபடிகள், சமூகநீதிக்கு எதிரான போக்குகள், பல்முகத் தன்மைக்கு எதிரான தன்மைகள் பற்றியெல்லாம் விளக்கி உரையாற்றினர்.

விடுதலைச் சிறுத்தைகள் மாநில அரசியல் குழு செயலாளர் அரசு.வணங்காமுடி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழழகன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தமீம், மனித நேய மக்கள் கட்சி ராஜாமுகமது, எஸ்.டி.பி.அய் சுல்தான் கவுஸ், மீனவர் விடு தலை வேங்கை ஆனந்தராஜ், காரைக்கால் மக்கள் முன்னணி ந.ப.குமணன், த.மு.மு.க.அப்துல் ரகீம், காரை சிறகுகள் வெங் கடேசன், ராஜேசு (மாணவர் கூட்டமைப்பு), பஸ்ருதீன், திராவிடர் மாணவர் கழக நிர்வாகி பெரியார் கணபதி, காரைக்கால் மண்டல செயலாளர் கிருட்டிண மூர்த்தி, கடலூர் மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், கழக பேச்சாளர் புலவர் ராவணன், காரை கழக இளைஞரணி தலைவர் செந்தமிழன், பொதுக் குழு உறுப்பினர் பன்னீர், மண்டல மாணவரணி செயலாளர் பொன்முடி, காரை கழக துணைத் தலைவர் பதி செய்சங்கர் ஆகி யோர் பங்கேற்று கருத்துரை ஆற் றினர்.

முடிவில் இந்திய கம்யூ னிஸ்ட்டு கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கீதநாதன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner