எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மயிலாடுதுறை, ஜன.10 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள் மயிலாடுதுறையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலம் நடைபெற்றது.

விவரம் வருமாறு:

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு 24.12.2017 காலை 10.30 மணியளவில்  மாவட்ட தலைவர் ஆ.ச. குணசேகரன், நகர் மன்ற முன்னாள் தலைவர் லிங்கராஜன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெரியார் கொள்கை முழங்க தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே கழகத்தோழர்கள் இருசக்கர வாகனங்களில் கழகக் கொடியேந்தி அமைதி ஊர்வலமாக பெரியார் படிப்பகத்தை வந்தடைந்தனர். விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் படிப்பகத்தில் காலை 11.30 மணிக்கு மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் என்.தியாகராஜன் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இயக்கப்பாடல்கள்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆற்றலரசு இசையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அருள்தாஸ் இயக்கப் பாடல்களை பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இசை நிகழ்ச்சியைப் பாராட்டி கழகத்தோழர்கள் அளித்த 1,240 ரூபாய் மாவட்ட அலுவலகத்திற்கு மேலும் ஒரு ஒலிபெருக்கி வாங்குவதற்காக இசைக்குழுவினரால் மாவட்ட செயலாளரிடம் வழங்கப்பட்டது.  மயிலாடுதுறை திருக்குறள் பேரவை செயலாளர் சிவகோபாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக தோழர் இரெ.செல்லதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நன்கொடை

கொள்ளிடம் ஒன்றியம் சிதம்பரநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்மாறன், இரா.சுகுமார், கல்பன் ஆகிய மூன்று இளைஞர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் இயக்கத்தில் புதிதாக தங்களை இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த தோழர்களுக்கு நகர தலைவர் சீனி.முத்து சால்வை அணிவித்தார். மேலும் தோழர் சீனி.முத்து  தன் பிறந்தநாளை முன் னிட்டு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி தேநீர் விருந்தளித்ததோடு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு 500 ரூபாய் நன்கொடையாக வழங்கினார். வாசகர் வட்ட தலைவர் நா.சாமி நாதன் நன்றி கூற நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெற்றது.

கலந்துகொண்டோர்

நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் தம்பி.சத்யேந்திரன், நகர் மன்ற முன்னாள்  உறுப்பினர் ஆர்.கே.சங்கர், மயிலாடுதுறை ஒன்றிய திராவிடர் கழக தலைவர் ஆர்.டி.வி. இளங்கோவன், நகர செயலாளர் அரங்க.நாக ரெத்தினம், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், துணைத்தலைவர் அ.முத்தையன், செயலாளர் ம.பாலசுந்தரம், சீர்காழி நகர தலைவர் சபாபதி,  ஒன்றிய தலைவர் ச.ப.செல் வம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரெங்கன், சித்தர்காடு செல்வராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் மூ.முகில் வேந்தன், செயலாளர் ச.மதியழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அ.சாமிதுரை, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பி.இராஜேந்திரன், கே.ஜி.நாகராஜன், இரசீத் கான், கு.பெரியசாமி, டெலிபோன் செல்வராஜ், அரிவளூர் இரெ.சுரேஷ்குமார், ஜெகன்.சாமிக் கண்ணு, ஓய்வு பெற்ற காவல்துறை தோழர்கள் கோ.ராமலிங்கம், சேட்டு, நாகப்பன், இளை ஞரணி தோழர்கள் ரா.பிரவின்ராஜ், ஏ.விடுதலை ராஜா, சே.பாலாஜி, மற்றும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பெருந் திரளாக கலந்துகொண்டனர்.