எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கி.மு. திராவிடமணியின் பணிவிடை விழாவில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் நூலை வெளியிட்டு உரை!

ஆவடி, ஜன. 11, திருமுல்லைவாயில் பகுதி யைச் சேர்ந்த கி.மு. திராவிடமணி அவர்களின் பணிவிடை விழாவில் கலந்து கொண்ட எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? என்ற நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

உண்மை வாசகர் வட்டத்தின் செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில கருத்தியல் பரப்புரைச் செயலாளருமான கி.மு. திராவிடமணி ஆவடி டேங்க் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றதையொட்டி கடந்த 31.12.2017 அன்று காலையில் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள சரஸ்வதி நகரில் அவரது வீட்டி னருகில் பெரிய அளவில் ஒரு விழாவாகவே ஏற்பாடு செய்திருந்தார். அதில் விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் அவர்கள் கலந்துகொண்டு உரை யாற்றினார்.

புத்தக வெளியீடு!

தொடக்கத்தில்  தோழர் சமத்துவன் அனை வரையும் வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்டத்தில் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆற்றிய உரையின் புத்தக வடிவத்தை அவரே 31.12.2017 அன்று காலையில் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் நடைபெற்ற கி.மு. திராவிடமணியின்பணி விடை விழாவில் வெளியிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பகுதித்தலைவர் ஆதவன் மற்றும் இராவணன், ஆவடி நகர கழக. இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், அம் பத்தூர் நகரத்தலைவர் இராமலிங்கம், ஆவடி நகர கழக செயலாளர் முருகன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, உண்மை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் பூவை செல்வி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் புத்தகங் களுக்குரிய தொகையைக் கொடுத்து எழுச்சித் தமிழரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

மூடநம்பிக்கை ஒழிப்பு!

நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கி.மு.திராவிடமணியின் சமூகப்பணி களைப் பாராட்டிப் பேசினர். முன்னதாக மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியாக முதுகில் கொக்கி மாட்டிக்கொண்டு பொக்கலைன் எந்தி ரத்தில் மூன்று பேர் தொங்கிக்காட்டினர். திருமாவளவன் அப்படித் தொங்கியவர்களை பாராட்டிப் பேசும் போது, கடவுள் நம்பிக்கை இருந்தால்தான் இப்படிச் செய்யமுடியும் என்பதில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாமலும் செய்யமுடியும் என்பதைக் காட்டுவதற்காக தங்களை வருத்திக்கொண்டு இப்படி செய்திருக் கிறார்கள் என்று  அம்மூவருக்கும் மேடையில் வைத்து பயனாடை அணிவித்து மரியாதை செய்து பாராட்டினார். இறுதியில் ஒரு பெரிய தராசு மூலமாக திருமாவளவன் அவர்களுக்கு எடைக்கு எடை நாணயங்கள் வழங்கப்பட்டது.

கொள்கைக்குன்று திராவிடமணி!

சிறப்புரையாற்றிய திருமாவளவன் அவர்கள், தனது உரையில் நிகழ்ச்சியின் நாயக னாக இருந்த கி.மு. திராவிடமணி அவர்களைச் சுட்டிக்காட்டி, பெயரிலும் பண்பாட்டு படையெடுப்பு இருப்பதை அறிந்து, சுப்பிரமணி என்று இருந்த தனது பெயரை திராவிடமணி என்று மாற்றிக்கொண்டவர் என்றும், உணவிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்துத்துவாவிற்கு பதிலடி கொடுக்கிற வகையில், மாட்டுக்கறி உணவை எப்போதும் முன்னிலைப்படுத்துகிறவர் என் றும், திருமணத்தின் போது இணையருக்கு தாலி அணிவித்திருந்தாலும் அது பெண்ணடிமைச் சின்னம் என்பதை பின்னாளில் அறிந்து, அதை தனது (திருமாவளவன்) தலைமையில் சேலத்தில் நடைபெற்ற இந்துத்துவா எதிர்ப்பு மாநாட்டில் இருவரும் ஒத்த கருத்தோடு கழற்றிக்கொண்டனர் என்றும், அம்பேத்கரையும் பெரியாரையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கருதுபவர் என்றும், தான் சார்ந்திருக்கும் கருத்தியலை வெளிப்படையாக அறிவித்து எல்லோருடனும் இனிமையாக பழகியபடியே பணியாற்றியவர் என்றும், அவருக்கு உறுதுணையாக அருந்ததி அவர்களும் இருந்து வருவதையும் கூறி இன்னும் பலபடப் பாராட்டிப் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்!

தி.மு.க. மாவட்டச் செயலாளர் ச.மு.நாசர், பி.எஸ்.பி. துரைகார்த்திக், பட்டாபிராம் வழக் குரைஞர் ஆனந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கருத்தியல் பரப்புரை செயலாளர் சி.பி.சாந்தர், கருத்தியல் துணைச் செயலாளர் ஆதிமொழி, மாநில ஒருங்கிணைப் பாளர் பாலசிங்கம், புத்தபிக்கு மவுரியா, ஆவடி தொகுதித் தலைவர் ஆதவன், சக்திவேல், சித்தார்த்தன், களம்பூர் செல்வராஜ், நாகராசு, அம்பேத்கர்தாசன், அய்யப்பன், தி.மு.க.வைச் சேர்ந்த கொரட்டூர் இரா.கோபால், கழக மண்டலச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட் டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் சிவக் குமார், அமைப்பாளர் உடுமலைவடிவேல், இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், மண்டல மாணவரணிச் செயலாளர் பா. மணியம்மை,  உண்மை வாசகர் வட்டத் தலைவர் செந்துறை இரா.இராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் பெரம்பூர் வெங்கடேசன், அம்பத்தூர் முத்துக்கிருஷ்ணன், தமிழ்மணி, விடுதலை, கி. மணிமேகலை, இ.ப.இனநலம், வ.ம.வேலவன், பார்த்திபன், செ.பெ.தொண்டறம், உண்மை வாசகர் வட்ட பொறுப்பாளர் ஜெயந்தி, திரா விடர் கழக மகளிர் பாசறை தலைவர் வனிதா, அம்பத்தூர் பகுதி தலைவர் இராமலிங்கம், உண்மை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப் பினர் வை.கலையரசன், ஆவடி நகரச் செயலாளர் முருகன், தங்கமணி தனலட்சுமி மற்றும் ஆவடி டாங்க் தொழிற்சாலையில் கி.மு.திராவிடமணி அவர்களுடன் பணிபுரிந்த பலரும் வருகை தந்து அவரை வாழ்த்திப் பேசினர். --------

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner