எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஜன.19 23.12.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட் டத்தின் சார்பாக 60ஆவது நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா. பவுன் ராசா மதுரை மண்டல கழக செய லாளர் வரவேற்புரை  ஆற்றினார். “பெரியாரைப் பேணுவோம்“ என்ற தலைப்பில் பேராசிரியர் நம். சீனிவாசன் சிறப்பான பேருரை ஆற்றினார். அவர் தம் உரையில்,

பெரியார் அவர்கள் இதுவரை கலந்து கொண்ட கூட்டங்களின் எண்ணிக்கை, பயணித்த தூரங்கள், உரையாற்றிய நேரங்கள் ஆகியவற்றை துல்லியமாக விளக்கி கூறியபோது பிரமிப்பு ஏற்பட்டது.

பெரியார் தனது 45ஆவது வயதில்தான் பொது வாழ்வுக்கு வந்தார் என்றும். அப்போது அவர் வகித்து வந்த 29 பதவிகளை துறந்து விட்டுதான் பொதுவாழ் வுக்கு வந்தவர் என்றும் மனதில் பட்டதை மறைக்காமல் சொல் பவர் என்றும் விளக்கினார்.

அவருடைய சிந்தனைகள் தமிழகம் தாண்டி இந்தியாவையும் தாண்டி உலகத்துக்கே பொதுவான சிந்தனைகளாக இருந்து வருவது சிறப்புக்குரியது என்று கூறினார். உலகத்திலேயே தனது கொள்கை களுக்காக போராடி அதில் தன் ஆயுட்காலத்திலேயே வெற்றியை கண்கூடாக கண்டவர் பெரியார் என்றும் கூறினார்.

ஜாதி ஒழிப்புக்கு போராடி பெரியார் வெற்றி கண்டார் என்பதற்கு ஒரே சான்று என்ன வென்றால் தற்போது எத்த னையோ ஜாதி சங்கங்கள்  இருந் தாலும் கூட அந்த ஜாதி சங்கத் தலைவர்கள் தங்கள் பெயருக்கு பின்னாலே ஜாதியைப் போட துணியவில்லை என்பதே பெரி யாருக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று குறிப்பிட்டார்.

முடிவில் விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் அ. முரு கானந்தம் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner