எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சிவகங்கை, ஜன.22 சிவகங்கையில் பொங்கல் விழா கடந்த 14.1.2018 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வீடெல்லாம் வெல்லப் பாகும், பருப்பு நெய் ஏலமும், பாலும் புது நெருப்பேறி, அரிசியை பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்ப நாளாம் தைத் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு, திராவிடர் திருநாளாம் பொங்கல் அன்று தமிழர் உரிமை காத்திடும் தன்மானம் பொங்கிட பொங்கல் வைத்திட்ட பின்னர் சிவகங்கை நகரம் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள மேனாள் மாவட் டத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான சிவகங்கை சுப்பையா இல்லம் முன்பாக, 14.1.2018 அன்று காலை 11 மணி அளவில், கடலையும் கலக்க காட்டையும் தாக்கி, தடையென நிற்பன தகர்த்து யாவையும் அடி முதல் நுனி வரை அனைத்தும் புதுயுக விடியலில் தமிழகமே விழித்தெழ புயலெனவந்த எம் தலைவர் அறிவு ஆசான்தந்தை பெரியார் கண்ட இயக்கமாம் சுயமரியாதை உணர்வூட்டும், திராவிடர் கழகத்தின் கொடியை, தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க! முன் எடுப்போம் முன் எடுப்போம் தமிழ்ப் புத்தாண்டை முன்னெ டுப்போம் என்கின்ற முழக்கங் களுக்கு இடையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவ கங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் திருமலை ஆ.முத்து ராமலிங்கம் அவர்களின் முன்னி லையில் பொதுக்குழு உறுப்பி னர்கள் சிவகங்கை சுப்பையா, மணிமேகலை சுப்பையா, சு.அருண்குமார், சே.லோகநாயகி, கவின்நிலவன், கதிர், இராச சுந்தரம், திமுக தோழர்கள் மதி வாணன், கோவிந்தன், சோமன் முத்துராமலிங்கம் மற்றும் பொது மக்கள் பங்கேற்றிட திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடி சிவகங்கை வழக்குரைஞர் ச.இன் பலாதன் மிகுந்த எழுச்சியுடன் ஏற்றி வைத்தனர்.

கொடியேற்றுதல் நிகழ்வின் மகிழ்வாக வந்திருந்தோர் அனை வரும் முகமகிழ்ச்சியுடன் அன் பான நன்றியை தெரிவித்து பொதுக்குழு உறுப்பினர் மணி மேகலை சுப்பையா இனிப்பு களை வழங்கினர்.

தமிழ்த்தேசியம் என்ற பெய ராலே சரியான புரிதல் இன்றி திராவிடத்தை வம்சை செய்து கொண்டிருக்கும் சிறு மதியாளர் களுக்கு அனைத்துக்கும் தீர்வு தந்தை பெரியார் பாதையே எனப் பறைசாற்றி, மொழியாக தமிழன், இனத்தால் திராவிடன் என்று ஊரார்க்கு உரக்கச் சொல்லும் வண்ணம் வீட்டின் முன்பாகவும், மேல் தளத்திலும் பறந்து கொண் டிருக்கக்கூடியகழகக் கொடிகள் கம்பீரமாய் சாட்சி தருகின்றன.

தோழர்கள் இல்லம்தோறும் கழக கொடி பறந்திட வேண்டும் என்கின்ற தமிழர் தலைவர் அவர்களின் எண்ணப்படி, ஆணைப்படி சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொடியேற்றுதல் நடைபெற்று வருதல் குறிப்பிடத் தக்கதாகும்.