எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேத்தால், ஜன. 26- அரியலூர் தோழர் மருத்துவர் வசந்தா அவர் களின் கணவரும், பொறியாளர் ஆம்ஸ்ட்ராங், பத்மா, அமுதா ஆகியோரின் தந்தையுமாகிய மதியழகன் (வயது 66) அவர்கள் 26.12.2018 அன்று மறைவுற்றார்.

அவரது படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்ச்சி 6.1.2018 அன்று அவரது சொந்த கிராமமான மேத் தால் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செந்துறை இரா ஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் முன்னிலை வகித்தார். அன்னாரது படத்தினை திருமழப் பாடி தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் ஆறுமுகம் திறந்து வைத்தார்.

இரங்கலுரை ஆற்றியவர்கள்

ஆலத்தியூர் ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல கழக செயலாளர் மணிவண்ணன், திருமழப்பாடி தமிழ்ச்சங்க செயலாளர் புலவர் திருநாவுக்கரசு, பொதுக்கழு உறுப்பினர் பெரம்பலூர் ஆறு முகம், மா.பெ.பொ.க. மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலை வர் தங்க.சிவமூர்த்தி, புலவர் அரங்கநாடன், மருத்துவர் வானொலி, வழக்குரைஞர் பகுத் தறிவாளன், தலைமையாசிரியர் அல்லி, அரிமா சங்க தலைவர் நெப்போலியன், பகுத்தறிவாளர் கழக அப்துல் மஜித், பா.இளங்கோவன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி, அரியலூர் நகர கழக தலைவர் பொறியாளர் கோவிந்தராஜ், மகளிர் சுய உதவி குழு தலைவர் வள்ளி, அனைத் திந்திய மகளிர் சங்க தலைவர் மலர்க்கொடி ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக அன் னாரது புதல்வர்களும், மருத்துவர் வசந்தா அவர்களும் நினைவு ரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் இரத்தின இராமச் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், அரியலூர் ஒன்றிய செயலாளர் கோபால கிருஷ்ணன், அமைப்பாளர் செல்லமுத்து, அரியலூர் நகர கழக செயலாளர் காமராஜ், ஒன்றிய துணைத் தலைவர் மருத முத்து, அறிவு ஜீவா அச்சக உரிமையாளர் செல்லபாண்டியன் மற்றும் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர்பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner