எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, பிப்.4 முழு நிலவு மறைவைப் (பூரண சந்திர கிரகணம்) பற்றிய மூட நம்பிக்கையை முறியடிக்க கருநாடக மாநில திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கள் தீவிர பரப்புரை செய்தனர்.

31-.1-.2018 அன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி யாரும் வெளியே வரக் கூடாது; எதுவும் சாப்பிடக் கூடாது; சந்திர கிரகணம் முடிந்த பிறகு குளித்து விட் டுத்தான் சாப்பிட வேண்டும் என்று மூடநம்பிக்கையாளர்கள் பரப்புரை செய்தார்கள்.

இதை முறியடிக்கும் வகையில் பகுத்தறிவு வாதிகள் பெங்களூரு நகர் மன்றத்தின் முன்பாக ஒன்று கூடி மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை பல விதமான உணவுகளை உண்டு களித்தனர்.

ஒலி பெருக்கி மூலம் மூட நம்பிக்கை ஒழிப்பு பரப்புரை செய்தார்கள்.

சுண்டல், காராசேவு, பிஸ் கெட், சம்சா, வடை, பஜ்ஜி, போண்டா, பொரி கடலை, பழ வகைகள், பழரசம் போன் றவற்றை மகிழ்ச்சியுடன் சாப் பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க வைச் சேர்ந்த  ஆனந்த ராஜ், கருணாநிதி, பாரதி ராஜா, பொதுநல வழக்குரைஞர் நர சிம்மமூர்த்தி, கருநாடக மாநில திராவிடர்கழகத் தலைவர்

மு. சானகிராமன், செயலாளர், இரா. முல்லைக்கோ, கழக முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் முத்துசெல்வன், கி.சு.இளங்கோவன், கஜபதி, எம். செயகிருட்டினன்,  இரா.இராசாராம், சண்முகம், பழனி வேல்,  ஆட்டோ பாஸ்கர், வழக்குரைஞர் பிரிவு குணவேந் தன், அருண் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கருநாடக தலித் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் கலந்து கொண்டார்கள். கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner