எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடக்குத்து, பிப். 14 28.1.2018 அன்று மாலை 6 மணியளவில் வடக்குத்து பெரியார் படிப்பகத்தின் 40ஆவது மாதாந்திர வாசகர் வட்டத்தொடர் சொற்பொழிவு கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன் வரவேற்புரை ஆற்ற வடக்குத்து ஊராட்சி திமுக பொருளாளர் சி.தர்மலிங்கம் தலைமை தாங்கினார். முன்னதாக பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் இரா.மாணிக்கவேல் கழக பாடல் பாடினார்.

கழகத்தினுடைய பேச்சாளர் புலவர் இராவணன், மாவட்ட செயலாளர் நா.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழர் புத்தாண்டு தமிழர் திருநாளும் என்ற தலைப்பில் மிக சிறப்பாக அரங்கம் அதிர உரையாற்றினார்கள். தமிழர்களின் பெருமையையும், தமிழ்மொழியின் அருமையையும் உலகளாவிய அளவில் ஒப்பிட்டு உரையாற்றினர். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன், ஒன்றிய அமைப்பாளர் அப்பியம்பேட்டை வேலு, கம்மாபுரம் ஒன்றிய தலைவர் பாவேந்தர், இந்திராநகர் செயலாளர் ந.கனகராசு, மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் பத்மாவதி இராமநாதன், நெய்வேலி விசயலட்சுமி, இந்திராநகர் விசயா என ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக நகர த்லைவர் இரா.கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner