எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கும்பகோணம், பிப். 21- நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய தமிழகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக இயக் கங்களின் மாணவரணி சார்பாக (சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவை) கும்பகோணத்தில், திராவிடர் கழக குடந்தை மாவட்ட அலுவலகமான பெரி யார் மாளிகையில் அனைத்தி யாக்க மாணவர்கள் அமைப்பு களின் கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திராவிடர் மாணவர் கழக மாநில துணை செயலாளர் ச.அஜிதன் தலைமை வகித்தார். சிறப்பான இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாணவர் அமைப்புகளாக: திரா விடர் மாணவர் கழகம் சார்பாக குடந்தை கழக மாவட்ட தலை வர் நாக.செந்தமிழன், மாவட்ட மாணவரணி துணை அமைப் பாளர் ஜெ.பரத், பாரதிதாசன் பல்கலைகழக திராவிடர் மாணவர் கழக தலைவர் மோ.விஜய், குடந்தை அறிவுவிழி குரு, மேலக்காவேரி ரா.மணி கண்டன் ஆகியோரும், திரா விடர் முன்னேற்றக்கழக மாண வரணி சார்பாக தஞ்சை வடக்கு மாவட்ட அமைப்பாளர் செந் தில் குமார், மாவட்ட துணை அமைப்பாளர்  முத்துராமலிங் கம் அவர்களும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பட்டதாரி அணி மாவட்ட தலைவர் நரசிம்மலு விக்ரம், மாணவர் காங்கிரஸ் சார்பாக கலியபெருமாள், அர்ஷத் ஆகி யோரும், மறுமலர்ச்சி திரா விடர் முன்னேற்றக்கழக மாண வரணி சார்பாக நகர மாணவ ரணி அமைப்பாளர் வெற்றி குமார் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற் போக்கு மாணவர் கழகம் சார் பாக மாவட்ட அமைப்பாளர் சின்ன.ஜெயப்ரகாஷ், தே.ரூபன், அ.ஆனந்த் பாபு, முஸ்லீம் லீக் கட்சியின் மாணவரமைப்பு சார்பாக முகமது செல்லப்பா அவர்களும் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழ கம் சார்பாக மாவட்ட தலைவர் குடந்தை கு.கவுதமன், மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு. துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் நிம்மதி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் குடந்தை க. குருசாமி, மாவட்ட கழக இளைஞரணி தலைவர் பொறி யாளர் க.சிவகுமார், நகர தலை வர் வழக்குரைஞர் பீ.ரமேசு, நகர செயலாளர் நா. காமராசு, மாவட்ட மகளிரணி பொறுப் பாளர் ராணி குருசாமி, ஒன்றிய துணை தலைவர் ஆ. தமிழ் மணி, திருவிடைமருதூர் ஒன் றிய துணை செயலாளர் வெ. குணசேகரன், ஒன்றிய அமைப் பாளர் அ.சங்கர், மந்திரமா தந்திரமா கலைஞர் பெரியார் பெருந்தொண்டர் ஜெயமணி குமார் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை திரா விடர் கழக மாவட்ட இளைஞ ரணி தலைவர் பொறியாளர் க. சிவக்குமார் படித்தார்.

மதிமுக மாணவரணி நகர அமைப்பாளர் வெற்றிகுமார் நன்றிகூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) கடந்த 11 பிப்ரவரி 2018 அன்று சென்னை பெரியார் திட லில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலை மையில் நடந்த அனைத்து இயக்கங்களின் மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக (சமூகநீதி பாதுகாப்புக் கான பேரவை) நிறைவேற்றப் பட்ட அனைத்து தீர்மானங்க ளையும் வரவேற்று அதை குடந்தை மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் செயல் வடிவமாக மாற்றும் பணியில் எழுச்சியுடன் முனைவோம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

2) சமூகநீதி பாதுகாப்புக் கான பேரவை தலைமை ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்தபடி வருகிற 22 பிப்ரவரி 2018 அன்று கும்பகோணம் கழக மாவட்ட சமூகநீதி பாது காப்புக்கான பேரவை சார்பாக தலைமை தபால் நிலையம் வாசலில் மாபெரும் மாணவர் கள் கூட்டமைப்பின் கண்டன ஆர்பாட்டம் அறவழியில் நடத் துவது என்று தீர்மானிக்கப்படு கிறது.

3) சமூகநீதி பாதுகாப்புக் கான பேரவை சார்பாக உரு வாக்கப்பட்ட நீட் எதிர்ப்பு துண்டறிக்கைகளை குடந்தையிலுள்ள அனைத்து பள்ளி கல் லூரிகளுக்கும் மாணவ மாண விகளுக்கு அனைத்தியாக்க பொறுப்பாளர்களும் குடும்பத் துடன் விநியோகம் செய்து நீட் பற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்துவதென்று தீர்மானிக்கப் படுகிறது.

4) கண்டன ஆர்பாட்டத்திற் கான செலவுகளை அனைத்து இயக்கங்களும் இணைத்து பகிர்ந்துகொள்ளுதல் என்று தீர்மானிக்கப்படுகிறது.

5) கண்டன ஆர்பாட்டத் திற்காக ஒலிப்பெருக்கி வச தியை திராவிடர் கழக மாவட்ட நகர கழகம் சார்பாக மாவட்ட தலைவர் கு.கவுதமன், துணை தலைவர் உள்ளிக்கடை துரை ராசு. நகர தலைவர் வழக்கறிஞர் பீ. ரமேசு. வழக்கறிஞர் நிம்மதி ஆகியோர் ஏற்றுக்கொண்ட மைக்கு கூட்டம் நன்றி தெரிவித்துக்கொண்டது.

6) இரங்கல் தீர்மானம்: நீட் தேர்வை எதிர்த்தும் தமிழக மாணவர்களின் வருங்கால உயர்கல்விக்கனவுகலை காப்பாற்றவும் கடைசிவரை போராடி கடைசியில் தனது இன்னுயிரை நீர்த்த தோழியர் அனிதா அவர்களுக்கு இக்கூட் டம் மரியாதை செலுத்தியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner