எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தஞ்சை, பிப். 21- 19.2.2018 அன்று தஞ்சாவூர் மாவட்டம் சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவை (அனைத்து மாணவர் அமைப் புகளின் கூட்டமைப்பு) சார்பில் மதியம் 2 மணியளவில் கல் லூரி வாயிலிலும் மாலை 4.30 மணியளவில் பள்ளி வாயிலி லும் மாணவர்களிடம் “நீட்" நாட்டுக்கு, வீட்டுக்கு, உயி ருக்கு கேடு எனும் துண்ட றிக்கை விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவையின் ஒருங்கிணைப் பாளர் வே.ராஜவேல் மற்றும் உறுப்பினர்கள் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி அமைப் பாளர், இரா.வெற்றிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ப.விஜயக்குமார், மாநகர தலைவர் நரேந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன், திராவிட முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வன், துணை அமைப் பாளர்கள் வ.திருவள்ளுவன், செல்வ.கலைமணி, சதீஸ், வெங்கட்ராகவன், ஒன்றிய மாணவரணி பொறுப்பாளர்கள் சரவணன், பாலமுருகன், கோபிநாத் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

2000 துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.