எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

"உலக தத்துவ ஞானி" தந்தை பெரியார் நூலகத்தில் உரையாற் றிய "பெரியார் ஒளி" அ.அருள்மொழி குவைத் நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் "உலக தத்துவ ஞானி" தந்தை பெரியார் நூலகம் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் விழாவும் 20.1.2018 அன்று மிர்காபிலுள்ள ஹீர் ரஞ்ஜா உணவகத்தில் நெல்சன் மண்டேலா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த, திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி வருகை தந்து எழுச்சியுரை ஆற்றினார். பெரியார் சிந்தனைகளும் திராவிட கழகத்தின் கொள்கைகளும் உலகம் முழுதும் பரவி கிளைபரப்பி மாபெரும் ஆலமரம் போல் தழைத்திட வேண்டுமென்கிற எண்ணத்தை குவைத் வாழ் தமிழர்களிடம் எடுத்துக் கூறினார்.

பேச்சின் இறுதியில்,  இந்த உரை இத்தோடு முடிந்து விடாது, இனிமேல் பேச்சு உங்கள் மனதிற்குள் நடக்கும். உங்கள் அறிவுக் குள் நடக்கும். உங்கள் திறமைகள்; நாம் யார்? நாம் மண்ணா? இலையா? காற்றா? நீரா? மண்புழுவா? நம் பணி என்ன என்ற கேள்விகள் உங்கள் மனதிற்குள் நடக்கட்டும் அதுதான் வரலாற் றுக்கு நாம் கொடுக்கின்ற விடை" என்று பெரியார் கொள்கையை குவைத்தில் தூவிவிட்டுத் தாயகம் திரும்பினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்களுக்கு நூலக நிறுவனர் காப்பாளர் செல்லப்பெருமாள் வரவேற்பு அளித்துத் தலைமை தாங்கினார், ராகுல் பேரவை குவைத் பொருளாளர் வெல்டன் கவுஸ் முன்னிலை வகிக்க, ஆலஞ்சியார், ஜெஸிமா சிராஜுதீன் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நேசன் நெல்சன் மண்டேலா பற்றி உரையாற்றினார். வாழ்த்துரை வழங்கினார். கருப்புச் சட்டைக்காரன் நெறியாளர் கா. ரஹமத்துல்லாஹ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின், கட்சிகளின் நிர்வாகி கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிலிருந்து தோழர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner