எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழகத்தின் சார்பில் மரியாதை கொளத்தூர், மார்ச் 25, திராவிடர் கழக மாநில மாணவரணித் துணைச் செயலாளர் நா.பார்த் திபன் தந்தையாரும், வட சென் னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணியின் சிறிய தந்தையாருமாகிய வ.நாக ராசன் (வயது 53) 6.3.2018, மதியம் 2 மணியளவில் உடல் நலக் குறைவின் காரணமாக மறை வுற்றார்.

மறைந்த வ.நாகராசன் தையற் தொழில் செய்து வந்தவர். அன் னாருக்கு சாந்தகுமாரி என்கிற மனைவியும், நா.அரிபாபு, நா.பார்த்திபன் ஆகிய மகன்களும் உள்ளனர்.

6.3.2018 இரவு 7.30 மணி யளவில் சென்னை கொளத்தூரி லமைந்த இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த அன்னாரது உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை வைத்து இறுதிமரியாதை செலுத்தினார். நா.பார்த்திபன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கழக மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் கி.இராம லிங்கம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், செம்பியம் தலைவர் பா.கோபாலகிருட்டிணன், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவரணி அமைப்பாளர் செ.பிரவீன்குமார், மு.சண்முகப்பிரியன், கு.செல் வேந்திரன், சோ.சுரேசு, யாழ்திலிபன், அம்பேத்கர் ஆகியோர் கழகத் துணைத் தலைவருடன் சென்று இறுதிமரியாதை செலுத் தினர்.

மறைந்த தோழரது கண்கள் விழிக் கொடை அளிக்கப் பட்டன. 7.3.2018 காலை 10 மணியளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைச் செயலாளர் கி.இராம லிங்கம், இளைஞரணி அமைப் பாளர் வ.தமிழ்ச்செல்வன், தி.செ. கணேசன், சொ.அன்பு, வ.கலைச் செல்வன், பா.கோபால கிருட் டிணன், கா.அமுதரசன், வலைக் காட்சி ரேவந்த், அருள், சிலம்பம் பயிற்சி ஆசிரியர் தர்மராசன், மருதுபாண்டியன், நிர்மல், தே.வடிவேல், வ.வெண்ணிலா, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குனர் பசும்பொன் செந்தில்குமாரி, வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை அமைப் பாளர் க.சுமதி, மு.பவானி, க.வெண்ணிலா, மு.தமிழ்ச் செல்வி மற்றும் பல தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner