எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடியாத்தம், மார்ச் 27 வேலூர் மாவட்டம் மகளிரணி மகளிர் பாசறை சார்பில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் பொதுக்கூட்டம் 17.3.2018 அன்று மாலை 6 மணியளவில் குடியாத்தம் பெரியார் திடலில் எழுச்சியோடு நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் ச. ஈஸ்வரி தலைமை தாங்கினார், மாவட்ட மாணவரணி செய லாளர் ச.செந்தமிழ் இன்மொழி வரவேற்புரை ஆற்றினார், வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் ச.கலைமணிபழனியப்பன், மாவட்ட அமைப்பாளர் ச.கலைவாணி, நகர மகளிரணி தலைவர் சு. சத்தியபூங்குழலி, நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா, மகளிர் பாசறை ச, இரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை உரையாற்றிய மாவட்ட மக ளிரணி தலைவர் ச. ஈஸ்வரி தன் தலைமை உரையில், போராட்டத்தின் வாயிலாக சிறை சென்றபோது 30 ஆண்களோடு தனி ஒரு பெண்ணாக சிறை சென்றேன். இந்த தைரியம் தந்தை பெரியாரால் வந்தது, இப்பொழுது மேடையில் பேசுகிறேன் என்று சொன்னால் தந்தை பெரியார்தான் காரணம் என கூறினார். மாவட்ட மகளிரணி செயலாளர் ச.கலைமணிபழனியப்பன் தன் உரையில், தந்தை பெரியார் சிலையை அகற்றவேண்டும் என கூறிய எச்.ராஜா அவர்களை கடுமையாக கண்டித்தும் தமிழ்நாடே எவ்வாறு கொந்தளித்தது, இது பெரியார் மண் இங்கு இந்துத்துவா எண்ணம் பலிக்காது, போன்ற கருத்துக்களை எடுத்துரைத்தார், கருத்துரை வழங்கிய வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி இன்றைய சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றம் போலியான முன் னேற்றம் அடைந்துள்ளதை பார்க்கிறோம். 8 வயது பெண்குழந்தை என்றும் பாராமல் வன்கொடுமை செய்யப்படுகின்ற நிலையில் தான் இப்பொழுது ஆண் சமுதாயம் இருக்கிறது என்று தன் ஆதங்கத்தை எடுத் துரைத்தார். கருத்துரை வழங்கிய வேலூர் மண்டல மாணவரணி தலைவர் ஓவியா அன்புமொழி தன் உரையில், இன்றைய சமுகத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதம் கிடைப்பதற்கே போராட வேண்டிய அவசியத்தில் உள்ளோம் தந்தை பெரியார் அவர்கள் 50 சதவீதம் பெண்களுக்கு வழங்கவேண்டும் என கூறினார் போன்ற கருத்துக்களை எடுத்துரைத்தார். குடியாத்தம் நகர மாணவரணி செயலாளர் ம.ஜ. சந்தீப் பெண்சமுகம் மற்றும் பெரியாரைபற்றியும் கவிதை வாசித்தார். சிறப்புரை ஆற்றிய சென்னை மண்டல மாணவரணி தலைவர் பா.மணியம்மை தன் உரையில், அன்னை மணியம்மையார் அய்யா அவர்களை 95 ஆண்டுகாலம் பொறுப்போடு பாதுகாத்து வந்தார். மேலும் மணியம்மையார் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்தார். எப்படியாவது தமிழ்நாட்டில் இந்துத்துவா விஷத்தை விதைக்கவேண்டும் என முயல்கிறார்கள் பார்ப்பனர்கள், அவர்களது எண்ணம் தூள் தூளாக நொறுக்கப்படும் என உணர்ச்சி பொங்க கூறினார். சிறப்புரையாற்றிய மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்பான எழுச்சியு ரையாற்றினார். தன்உரையில், நீட் என்ற முறையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை கடுமையாக விமர்சித்தார். தற்போது ஆளு கின்ற அ.தி.மு.க அரசு பிஜேபி அரசுக்கு கைபிள்ளையாக செயல்படுகிறது. காவி அரசியல் எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறது இதை பெரியார் கைத்தடி கொண்டு தடுக்கப்படும், திராவிட இயக்கத்தினால் நாம் பலன் அடைந்திருப்பதை எடுத்துரைத்தார். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார்தான் கோயில் கருவறைக்குள்ளேயும் நுழையும் போராட்டத்தை நடத்தினார் போன்ற கருத்துகளை தன் எழுச்சியுரையோடு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் மாநில மருத்துவரணி செயலாளர் பழ ஜெகன்பாபு, வேலூர் மண் டல தலைவர் வி.சடகோபன். மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் ச.கி.செல்வநாதன். மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் தி. அனிதா, மாவட்ட ப.க செயலாளர் இர.அன்பரசன், மாவட்ட ப.க துணை செயலாளர் க.அருள் மொழி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.இரவிக்குமார், பகுத்தறிவாளர் கழக செந்தமிழ் சரவணன், வேலூர் மாநகர ப.க செயலாளர் அ.மொ.வீரமணி, மாவட்ட இளைஞரணி க.ச.ரேவதி, நகர தலைவர் வி.மோகன், நகர செயலாளர் இரா.ராமன், சத்துவாச்சாரி நகர தலைவர் ச.கி. தாண்டவமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ப.அரிகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செ.பார்த்தீபன், இளைஞரணி பெருமாள், மற்றும் கழக தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியில் குடியாத்தம் நகர மாணவரணி தலைவர் செந்தமிழ் யாழினி நன்றியுரையாற்றினார்.