எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர், மார்ச் 28 கரூர் பசுபதிபாளையத்தில் 18.3.2018 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்ற தெருமுனை விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு கரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து தலைமை தாங்கினார். அனைவரையும் நகர செயலாளர் ம.சதாசிவம் வரவேற்று பேசினார். மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி தொகுப்பாளர் திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்கள் சாமியார்கள் பொதுமக்களை ஏமாற்றி பக்தி என்ற பெயரில் நடக்கும் மோசடிகளை, தோலுரித்து காட்டும் வகை யில் செய்முறை விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச் சாளர் இராம அன்பழகன் அவர்கள் உரை யாற்றும்பொழுது,

மத்திய,அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிமைகளைத் தட்டி பறிக்கும் விதமாக நீட் தேர்வு விலக்கு, மதவாதம் நுழைவு, காவிரி பிரச்சினை, பெரியார் சிலை உடைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய பிஜேபி அரசைக் கண்டித்து பேசினார். நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆசிரியர் ப.குமார சாமி, பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்ட துணை செயலாளர் வே.ராஜூ, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வழக் குரைஞர் குடியரசு, மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜா மணி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் தே.அலெக்ஸ், செயலாளர் ம.ஜெகநாதன், அமைப்பாளர் கார்த்திக், காந்தி கிராமம் குமார், ராஜா, கரூர் நகர தலைவர் க.நா.சதாசிவம், நகர செயலாளர் ம.சதாசிவம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், கரூர் ஒன்றிய செய லாளர் காலனி கிருஷ்ணன், கட்டளை உ.வைரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலுசாமிபுரம்

கரூர் வேலுச்சாமிபுரம் பெரியார் திட லில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கரூர் நகர தலைவர் க.நா.சதாசிவம் தலைமை தாங்கினார். அனைவரையும் காந்தி கிராமம் இளைஞ ரணி துணை செயலாளர் ராஜா வரவேற்று பேசினார். மந்திரமா? தந்திரமா? நிகழ்ச் சியை திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர் கள் தொகுத்து வழங்கி செயல்முறை விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் தலைமைக் கழகப் பேச் சாளர் இராம அன்பழகன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.நன்றியுரை வெங்கமேடு நகர இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் வழங்கினார்.
ஆவடி: அன்னை மணியம்மையார் பிறந்த நாள்

-ஆவடி, மார்ச் 28 ஆவடி கழக மாவட்டம் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா 10.3.2018 காலை 8 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் நடந்தது. அன்னை மணியம்மையார் படத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் கா.வனிதா தலைமையில் மகளிரணி பொறுப்பாளர் வ.மணிமேகலை,  மாலை அணிவித்து முழக்கங்கள் ஒலித்து மரியாதை செலுத்தப் பட்டது.

பங்கேற்றோர்

ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென் னரசு, மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி நகரச் செயலாளர் கோ.முருகன்,திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன், ஆவடி நகர இளைஞரணி தலைவர் இ.தமிழ்மணி, நகர இளைஞரணி செயலாளர் க.கலைமணி, மகளிரணி பொறுப்பாளர் க. பாக்யா,  மாண வரணி தோழர்கள், விஜய், வேலவன், காரல் மார்க்ஸ்,  பெரியார் பிஞ்சுகள் கா.செம்மொழி சமத்துவமணி, க.சித்தார்த்  ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner