எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மதுரை, மார்ச் 31 தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில்  நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைக்க மத்திய அரசு  நட வடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்து வதற்கு மதுரை, தேனி மாவட்டங் களில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம்  நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

அதன்படி மதுரை பழங்கா நத்தத்தில் இருந்து இன்று (31.3.2018) காலை தனது நடைப் பயணத்தை தொடங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வைகோவின் நடைப் பயணத்தை தொடங்கி வைத்தார்.

இதில், தமிழக காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு   மாநில  செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் திருமா வளவன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மற்றும் பழ.நெடு மாறன், சுப.உதயகுமார், வேல் முருகன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வைகோ வின் நடைப்பயணத்தில் நூற்றுக்கணக்கானோர் அவருடன் செல்கிறார்கள். பழங்காநத்தத்தில் இருந்து புறப்பட்ட நடைப் பய ணம் மதுரை புறவழிச் சாலை, காள வாசல் சந்திப்பு சென்ற டைந்தது. அங்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபயணம் இன்று மாலை தேனி முக்கிய சாலை விராட்டிபத்து வழியாக செக்கா னூரணி  சென்றடைகிறது. வைகோ அங்கு பொதுக் கூட் டத்தில் பேசுகிறார்.

நாளை உசிலம்பட்டி, அதை தொடர்ந்து ஆண்டிப்பட்டி, போடி, கூடலூர் செல்லும் வைகோ வருகிற 9-ஆம்தேதி தனது 10-ஆவது நடைப்பயணத்தை கம்பத்தில் நிறைவு செய்கிறார்.

மதுரை, தேனி மாவட்டங் களில் 250 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்லும் வைகோ நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்களின் ஆதரவை திரட் டும் வகையில் தனது போராட்ட வியூகத்தை அமைத்துள் ளார். நடைப்பயணத்தின்போது வை கோவுக்கு அந்தந்த பகுதிகளில் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளிக் கவும், அவரது நடைபயணத்தில் பங்கேற்கவும் திட்டமிட்டுள் ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner