எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செயங்கொண்டம், மார்ச் 31- அரியலூர் மாவட்டம் உடை யார்பாளையம் நகரில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் மகளிர் உரிமை பிரச் சாரக் கூட்டம் 16.3.2018 அன்று மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட மகளிரணி அமைப் பாளர் இரா.இந்திராகாந்தி தலைமையேற்க மகளிரணி பொறுப்பாளர் த.வளர்மதி வர வேற்றார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச் சந்திரன், மண்டல இ.அ. செயலாளர் மு.ராஜா, மாவட்ட இ.அ.செயலாளர், க.கார்த்திக், மாவட்ட இ.அ.துணை தலை வர் சு.அறிவன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் க.சிந்த னைச்செல்வன் ஆகியோர் உரை யாற்றிய பின்னர் தலைமை கழக சொற்பொழிவாளர் கோவை க.வீரமணி தந்தை பெரியார், அன்னை மணியம்மையாரின் சிறப்புகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார். மண் டல செயலாளர் சு.மணிவண் ணன் நன்றி கூறினார். முன்ன தாக மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை அம்மையார் ஜெயமணி குமார் சிறப்பாக நடத்திக் காட்டினார்.

பங்கேற்றோர்

மண்டல தலைவர் சி.காம ராஜ், மாவட்ட துணைச் செய லாளர் சோ.க.சேகர், செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், ஒன்றிய செயலாளர் மு.முத் தமிழ்செல்வன், அரியலூர் ஒன் றிய செயலாளர் மு.கோபால கிருட்டிணன், புலவர் அரங்க நாடன், ஆண்டிமடம் ஒன்றிய இ.அ.தலைவர் க.செந்தில், பிரபாகரன், சதீஷ், மருத்துவர் செல்வராசு, பொன்பரப்பி சுந் தரவடிவேல், செயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் துரை.பிர பாகரன், நகர தலைவர் கே. எம்.சேகர் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் திரளான பொதுமக்களும் சிறப்பாக பங் கேற்றனர்.