எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடகுத்து, ஏப்.1 வடகுத்து -இந்திரா நகர் பெரியார் படிப்பகத்தில் மகளிர் உரிமை கருத்தரங்கம் 25.3.2018 அன்று மாலை 6.30 மணியளவில் விசயாபாவேந்தர் தலை மையில் கே.என்.கலைச்செல்வி, தமிழ்மணி முன்னிலையில் நடைபெற்றது. திராவிட மகளிர் பாசறை மண்டல செயலாளர் ரமாபிரபா வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் "மகளிர் உரிமை" எனும் தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமனாதன், மாவட்ட பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர் மாணிக்கவேல், இந்திராநகர் கழக தலைவர் இரா.கண்ணன், செயலாளர் என். கனகராஜ், அப்பியம்பேட்டை கோ.வேலு, தில்லைநகர் வெங்கடாசலம், நெய்வேலி நா.பாவேந்தர்விரும்பி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

மகளிர் உரிமை கருத்தரங்கையொட்டி அன்னை மணியம்மையார் படத்துக்கு பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மாலை அணிவித்தார். நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner