எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப்.2அன்னை மணியம்மையார் அவர் களின் நினைவு நாள் கடந்த 16.3.2018 அன்று கழகத் தோழர்களால் தமிழகம் முழுவதும் கடைபிடிக் கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

கண்டியூர்

16.3.2018 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம், கண் டியூரில் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவையாறு ஒன்றிய தலைவர் துரை.ஸ்டாலின் தலைமையேற்று உரையாற்றினார். தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் வெ.ஜெயராமன், மாவட்ட விவ சாய அணி தலைவர் இரா.பாலசுப்பிரமணியன், ஒன்றிய அமைப்பாளர் மு.விவேகவிரும்பி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மாநகர செயலாளர் சு.முருகேசன், தலைவர் ப.நரேந்திரன், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இர.மணிகண்டன், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திராவிடர் கழக கொள்கை விளக்க உரையாற்றினர்.

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் கலந்து கொண்டு தொடக்கவுரையாற்றினார். திரா விடர் கழக தலைமை கழக பேச்சாளர் மாங்காடு மணியரசன் கலந்து கொண்டு மூடநம்பிக்கைகளை ஒழிக்கின்ற வகையிலும், தமிழக இளைஞர்கள், மாணவர்கள் அரசியல் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் வகையிலும் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் வருமாறு:

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு  இரா.குணசேகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ப.சுதாகர், திருவையாறு பேரூர் கழக செயலாளர் இரா.மதுரகவி, ஒன்றிய இளை ஞரணி தலைவர் கவுதமன், அமைப்பாளர் சக்கர வர்த்தி, பேரூர் கழகத் தலைவர் கோ.கவுதமன், பெரியார் பெருந்தொண்டர்கள் அம்மன்பேட்டை எம்.எஸ்.கலியபெருமாள், செம்மங்குடி காமராஜ், பெரும்புலியூர் கலிபெருமாள், திருபந்துரத்தி அன்பரசன், திராவிடர் கழக தோழர்கள் சாத் தனூர்பிரபு, பெரும்புலியூர் இ.தமிழரசன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வம், தஞ்சை மாநகர மாணவர் கழக செய லாளர் ந.காவியன், பெரியார் பெருந்தொண்டர் தண்டாயுதபாணி, தஞ்சை மாவட்ட ப.க. துணை தலைவர் பொ.ராஜீ, மற்றும் கழக தோழர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் திருவையாறு ஒன்றிய இளைஞரணி செயலாளர் அ.மோகன்ராஜ் நன்றி கூறினார்.

சங்கராபுரம்

16.3.2018 அன்று சங்கராபுரம் பேருந்து நிலை யம் அருகில் திராவிடர் கழக மேனாள் பொருளாளர் கோ.சாமிதுரை, மேனாள் மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளர் அ.கூத்தன் நினைவு விழா மேடையில் அன்னை மணியம் மையார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சமூகநீதி மற்றும் மகளிர் உரிமையை நிலைநாட்டும் வகையில் நடைபெற் றது.

கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன் தலைமை வகித்தார். ஓவிய இமயம் மு.கலைச்செழியன், புலவர் கு.சீத்தா, விழுப்புரம் மண்டல செயலாளர் குழ.செல்வராசு, இலக்கிய அணித் தலைவர் மாவட்ட புலவர் பெ.சயராமன் ஆகியோர் முன் னிலை உரையாற்றினர். சங்கராபுரம் நகர கழகத் தலைவர் இல.சேரன் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழகக் கொடியை மாவட்ட கழகச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் ஏற்றி னார். மாவட்ட தலைவர் ம.சுப்பராயன் தொடக்க உரையாற்றினார்.

தலைமைக்கழகப் பேச்சாளர்கள் முனைவர் காஞ்சி கதிரவன், புலவர் வடலூர் சு.இராவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, சங்கராபுரம் நகர ப.க.தலைவர் ஆ.இலட்சுமிபதி, செயலாளர் இரா.நாராயணன், திருக்கோவிலூர் ஒன்றிய தலைவர் கருப்புச்சட்டை ஆறுமுகம், உளுந்தூர்பேட்டை ஒன்றிய தலைவர் செல்வசக்திவேல், பேராசிரியர் தேவநேய சித்தி ரைச்செல்வி, சங்கராபுரம் ஒன்றிய கழக செயலாளர் கே.மதியழகன், குளத்தூர் கழக தலைவர் இரா.சிவக்குமார், வடகரை தாழனூர் கழக தலைவர் மு.சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன் நன்றி கூற கூட்டம் இனிமே முடிந் தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner