எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் கொள்கையால் விழிப்படையும் தமிழ்ச் சமூகம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு

புதுச்சேரி, ஏப்.3 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கிய புலம் கருத் தரங்கங்களில் 29.3.2018 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு மேனாள் அற நிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்ப னால் தொடங்கப்பட்ட தந்தை பெரியார் அறக் கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது. மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ் வில் தமிழ்மொழி மற்றும் இலக்கிய புல பொறுப்பு முதல்வர் முனைவர் ஆ.நாகலிங்கம் தனது வரவேற்புரையில்,

மயிலாடுதுறையில் நான் பெரியாரின் கொள்கை தெரியாத காலத்தில் சிறுவனாக தந்தை பெரியாரை பார்த்திருக்கிறேன். அந்த தாக்கத்தினால் கவரப்பட்டு இன்று வரை பெரி யாரை நேசிக்கிறேன் என்ற தகவலுடன் வர வேற்புரையாற்றினார். புதுச்சேரி பல்கலைக் கழக தமிழ்மொழி மற்றும் இலக்கிய புல பேராசிரியர் முனைவர் அரங்க.நலங்கிள்ளி அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கை வயப் பட்டதால் நான் தாலி இல்லா திருமணம் செய்து கொண்டேன் என்பதையும் என்னால் முடிந்தவரை அனைத்து இடங்களிலும் தலைவர் பெரியார் கொள்கையை பரப்புவதை இலக்காக கொண்டுள்ளேன். அதன் பெயரி லேயே நம்முடைய சிறப்பு சொற்பொழிவாளர் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி அவர்களையும், இதற்குமுன் பெரியாரியலாளர் வே.மதி மாறனை அழைத்து சொற்பொழிவாற்ற செய்த மையையும் குறிப்பிட்டு, அருள்மொழிபற்றிய சிறு வாழ்க்கை குறிப்பை நினைவு படுத்தி அறிமுகவுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு கல்லக்குறிச்சி திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறி வியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் கு.முருகானந்தம் அவர்கள் 1929 பிப்ரவரி 29 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும், தி ரிவோல்ட் ஆங்கில இதழில் 5 வயதுக்குட்பட்ட ஒரு லட்சம் குழந்தைகள் விதவையாக இருந்த நிலை வந்தது பற்றியும் குறிப்பிட்டு உரை யாற்றியது மட்டுமின்றி எச்.அய்.வி என்கிற நச்சு மருந்துக்கு (எச்.ராஜா) தந்தை பெரியார் என்ற மாமருந்தே தேவையென குறிப்பிட்டு உரையாற்றினார். இறுதியாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் தோழர் அ.அருள் மொழி அவர்கள் தந்தை பெரியாரின் முயற்சி யால் திருச்சியில் உள்ள பெரியார் கல்லூரி தொடங்கப்பட்டது முதல் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் பற்றியும், மாற்றாரையும் மதிக் கும் மாண்பு பெற்ற மாபெரும் தலைவர் தந்தை பெரியார் எனவும், குடி அரசு பத்திரிகை ஏற்படுத்திய விழிப்புணர்வு அதனால் புரா ணங்கள், வேதங்கள் எதிர்க்கும் நிலை தமி ழகத்தில் ஏற்பட்டது குறித்து கீதைக்கு மாற் றாக திருக்குறளை மேற்கொள்ள வேண்டியது குறித்தும் இனிவரும் உலகம் நூலில் தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை சுவைபட எடுத்துச் சொல்லி தமிழ், திராவிடம் குறித்து சரியான விளக்கத்தை அளித்து சிறப்பு சொற் பொழிவாற்றினார். புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்மொழி இலக்கிய புல உதவி பேராசிரியர் முனைவர் மூ.பெரியார் கருணாநிதி அவர்கள் தாம் சின்ன சேலத்தை சார்ந்தவன் என்றும் இன்றைக்கு இந்த பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வளர காரணம் தந்தை பெரியாரின் பிரச்சாரம் உழைப்பு என்று கூறி தந்தை பெரியார் பணியே பெரும் பணி என்றும் அய்யா வழியில் இளைஞர்கள் அனைவரும் பயணிக்க வேண்டும் என்றுகூறி சிறப்பான நன்றி உரையாற்றினர்.

அறக்கட்டளை நிகழ்வில் புதுச்சேரி திரா விடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, செய லாளர் அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, பெரியார் சிந்தனையாளர் மேனாள் தலைமை ஆசிரியர், செம்பிகை நன்னீரகம் நிறுவனர் தாமரைக்கோ, வடலூர் புலவர் இராவணன் பெயர்த்தி அருள்மொழி, புதுச்சேரி முனைவர் சிவ.இளங்கோ, புதுச்சேரி உள்ளிட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந.நடராசன், மு.ந.ந.நல்லய்யன், சுமதி, நல்லய்யன், புதுச்சேரி நகராட்சி அமைப்பாளர் மு.குப்புசாமி, காரை பெரியார் முரசு, புதுச்சேரி தன்னுரிமை இயக்க தலைவர் தூ.சடகோபன், உழவர்கரை நகராட்சி அமைப்பாளர் ஆ.சிவராசன், கலைமாமணி வி.பி.மாணிக்கம், சிவ.இள.கோவளன், இரா.சத்தியராஜ், இளைஞரணி தலைவர் திராவிட இராசா, மாணவர் கழக ஏழுமலை, பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா, களஞ்சியம் வெங்கடேசன், எழுத்தாளர் சீனு.தமிழ்மணி, அரிமாப் பாம கன், லதாராணி, வடசென்னை கணேசன் மற் றும் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள், நாடகத்துறை மாணவர்கள், அறிஞர் பெருமக் கள் பெருந்திரளாக அரங்கு நிரம்பி வழியும் அளவுக்கு வருகை தந்து கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner