எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஏப். 6, காரைக் குடியில் நடைபெற்ற மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஞ்ஞானி எஸ்.முழு மதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ந.செல்வ ராசன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல கழக தலைவர் சாமி.திராவிடமணி முன்னிலை வகித்தார். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் மு.சு. கண்மனி சிறப்புரையாற்றினார்.அவர் தனது உரையில்:  மாநில ப.க.கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தி யதன் அடிப்படையில் பல்வேறு கருத்துகளையும் எடுத்து சொன் னார்.மேலும் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்  களையும் நிறைவேற் றுவது என்றும் முடிவு செய்யப் பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ப.க.துணை தலைவர் ந.தம்பிராசு, மாவட்ட ப.க.துணை செயலாளர் ந.குமரன்தாசு, மாவட்ட  கழக தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை, மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணைச்செயலாளர் இ.ப.பழனி வேலு, தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, காரைக் குடி நகர தலைவர் ந.செகதீசன், செயலாளர் தி.கலைமணி, மேனாள் மா.ப.க.தலைவர் ப.சுந் தரம், காளையார் கோவில் ஒன் றிய அமைப்பாளர் யா.ராசசேக ரன், கோட்டையூர் நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் நாத்திகம் ராமசாமி, மு.நலன், காளையார் கோவில் சோமன், ச.தமிழினியன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.