எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிங்கம்புணரி, ஏப்-.6 தி.மு. கழகத்தின் முன்னோடிகளில் ஒருவரும் அறிஞர் அண்ணா ஆட்சியின் அமைச்சர்களில் ஒருவருமான மேனாள் சட்ட அமைச்சர் செ.மாதவன் அவர்கள் கடந்த 3ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் மறைவுக்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசி ரியர் அவர்கள் வழிகாட்டுதல்படி சிவகங்கை மண்டல  தலைவர் சாமி.திராவிடமணி தலைமையில் மண்டல செயலாளர் அ.மகேந் திரராசன்,சிவகங்கை மாவட்ட தலைவர் காளாப்பூர் ராசாராம், பொதுக்குழு உறுப்பினர் செ.தன பாலன், நகர கழக அமைப்பாளர் பெரியசாமி,ஒன்றிய கழக அமைப்பாளர் கிருங்கை லெட்சு மணன், லெ.அன்புச்செழியன், காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி,மாவட்ட செயலா ளர் கு.வைகறை,தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரசு பிராட்லா, சிங்கை பாரூக், ப.சுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப் போது அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்ததோடு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி யினை வழங்கினர்.மேலும் வந்தி ருந்த அனைவருக்கும் இரங்கல் செய்தி துண்டறிக்கை வழங்கப் பட்டது.

மாலை 4 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அய்யா மாதவன் அவர்கள் விருப்பப்படி எவ்வித மூடச்சடங்கும் செய்யாமல் சுய மரியாதைக் கொள்கை முறைப் படி இறுதி நிகழ்வு நடந்தது.

அவர்தம் குடும்பத்தினரும் அதற்கு ஒப்புதல் வழங்கி அவ ரின் விருப்பத்தை நிறைவேற் றியது குறிப்பிடத்தக்கது. இறுதி நிகழ்வில் தி.மு.கழக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின்,மேனாள் மத்திய அமைச் சர்கள்  ஆ.ராசா,எஸ்.ரகுபதி, மேனாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, சிவகங்கை மாவட்ட செயலாளர் கேஆர்.பெரிய கருப்பன்,மு.தென்னவன்,சுப.தங்கவேலன்,தங்கம் தென்னரசு, மற்றும் ஏராளமான கட்சி தொண் டர்களும் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.மேனாள் அமைச் சர் நத்தம் விஸ்வநாதன், தமிழக காங்கிரசு கட்சி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது மறைவை யொட்டி சிங்கம்புணரி நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner