எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஞ்சிபுரம், ஏப்.7 28.3.2018 அன்று காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் டி.ஏ.ஜி அரிசி ஆலையில், காஞ்சிபுரம், தாம்பரம் கழக மாவட்ட மாணவரணி கலந் துரையாடல் கூட்டம் மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலை மையில் நடைபெற்றது. மாணவரணித்தோழர் அறிவழகன் கடவுள் மறுப்பு கூறினார். காஞ்சிபுரம் மண்டல மாணவரணி செயலாளர் வழக் குரைஞர்  அ.அர்ஜுன்  அனை வரையும் வரவேற்றார். காஞ்சிபுரம் , தாம்பரம் கழக மாவட்டத் தலைவர்கள் டி.ஏ.ஜி. அசோகன்,  முத்தையன், மாவட்ட செயலா ளர்கள் பூ.சுந்தரம், ஆசிரியர்  நாத்திகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.     திராவிடர் கழக அமைப்புச்  செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அவர்கள் கலந்துரை யாடல் கூட்டத்தின் நோக்கங்கள், இன்றைய சூழலில் தமிழகநிலை,  கழகத்தலைவரின் செயற்பாடு கள், நாம் செயலாற்ற வேண்டி யதன் அவசியம், ஜூலை   8இல் குடந்தையில்  நடைபெறவுள்ள திராவிடர் கழக மாணவரணி   பவளவிழா மாநாட்டில் அனை வரும் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்தும்  உரையாற்றி னார்.         காஞ்சிபுரம் மண்டல திரா விடர் கழகத் தலைவர் பு.எல் லப்பன், செயலாளர் காஞ்சி கதிரவன், அரக்கோணம் கழக மாவட்டத் தலைவர் சு. லோக நாதன், காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் இ. ரவிந்திரன்,  தாம்பரம்  மோகன் ராஜ்,  காஞ்சிபுரம் மண்டல மாணவரணி செயலாளர் வழக்குரைஞர் அ.அர் ஜுன், மாவட்ட மாணவரணி தலைவர் அ.அரவிந்தன்,  கழக சொற்பொழி வாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை,  கராத்தே பர சுராமன், பொறியாளர் திலிபன், பொறியாளர் கார்த்திக் பாபு, பொறியாளர் சங்கர், பொறியாளர் பர்தின், பொறியாளர் மு. அருண் குமார், கோபிநாத், கோவிந்தராஜி, டி.ஏ.ஜே. எழிலன், ஏகாம்பரம், சு. புவி யரசி, சிறீதர், லோகநாதன்.  அறிவுமணி, இளம்பரிதி ஆகி யோர் உரையாற்றிய பிறகு மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாண வரணி செயற்பாடுகள் குறித்தும் மாணவரணி குறித்தும், மாண வரணியை வலுப்படுத்த வேண்டி யதன் அவசியம் குறித்தும் பல் வேறு செய்திகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார். இறுதியாக மாணவரணித் தோழர் விஜய் நன்றி கூறினார். நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்:

1. ஜூலை 8 ஆம் நாள் குடந்தையில், பெரியாரை சுவா சிப்போம்; பெரியாரால் பெரு வாழ்வு பெறுவோம் என்ற முழக் கத்தை முன்னிறுத்தி நடை பெறவுள்ள திராவிடர் மாணவர் கழக பவளவிழா மாநாட்டில்  300 மாணவர்கள் தனிவாகனங்களில் சென்று பங்கேற்பதென தீர்மானிக் கப்படுகிறது. 2. சுவரொட்டி, தட்டி விளம் பரம், ஊடகத்துறை விளம் பரம் என பலவகையில் மாநாட்டை விளம்பரப்படுத்துவ தென் றும் ஒதுக்கப்பட்ட மாநாட்டு நன் கொடைகளை வசூலித்துக்  தரு வதெனவும் தீர்மானிக்கப்படு கிறது.

3. நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்தும் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டவர்களுக்கு சமூகநீதி சரியாகக் கிடைக்கவும்  தமிழர் தலைவர் தலைமையில் தொடர்ந்து போராடுவதெனவும் தீர்மானிக்கப்படுகிறது. புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு   காஞ்சிபுரம் மாவட்ட மாண வரணி துணைத் தலைவர் - அறிவழகன், மாவட்ட மாண வரணி அமைப்பாளர் - செ. கவுத மன், காஞ்சி நகர மாண வரணி தலைவர் - ஏ.ஜி.ஆர். விஜய்,  துணைத் தலைவர் - உ.க. அறிவரசி, செயலாளர் - அ. அறி வரசன், துணைச் செயலாளர் - எ. பொன்மகள், அமைப்பாளர் - பெ. ஏகாம்பரம், செங்கல்பட்டு நகர மாணவரணி அமைப்பாளர் - சு. பொன்மணி, முகம்மது சதக் கலைஞர் அறிவியல் கல்லூரி மாணவரணி அமைப்பாளர்- சு.புவியரசி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner