எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாராபுரம்,ஏப்.7 தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தாராபுரம் நகர திராவிடர்கழகம் மற்றும் தாரா புரம் கழக மாவட்ட இளைஞரணி சார்பில் தாராபுரம் அண்ணாசிலை அருகில் 19.03.2018 அன்று மாலை 6 மணியளவில்  எழுச்சியோடு நடந்தது.

கூட்டத்திற்கு தாராபுரம் கழக மாவட்ட துணைச் செயலாளர் க.சண்முகம் தலைமை தாங்கி னார். தாராபுரம் நகர கழக செய லாளர் ப.மணி அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன்,அமைப்பாளர் கி.மயில்சாமி,இளைஞரணி தலைவர் நா.மாயவன்,செயலாளர் மா.இராமசாமி,தாராபுரம் ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம், செயலாளர் ச.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இரா.பெரியார்செல்வன் உரை

நிகழ்வில் சிறப்போடு பங் கேற்று எழுச்சியுரையாற்றிய திரா விடர் கழக தலைமை நிலைய சொற்பொழிவாளர் தஞ்சை.இரா.பெரியார் செல்வன் திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்ட வர லாறு குறித்தும்,கழகம் கடந்து வந்த போராட்டக்களங்கள் பற்றி யும், காவிரி பிரச்சினை தொடர் பாக உச்சநீதி மன்றத்தில் திரா விடர் கழகம் 1986இல் தொடுத்த வழக்கின் சாராம்சம் குறித்தும்  விரிவாக எடுத்துரைத்ததோடு, சமூகநீதிக்கு எதிராக நீட் தேர்வை அமல்படுத்துவதும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் கருநாடகாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மய்யமாக வைத்து சுயநலப் போக்கை கடைப் பிடிப்பதுமான மத்திய பிஜேபி அரசின் மக்கள் விரோதப் போக்கு, கோடிக்கணக்கான பணத்தின் மூலம் ஊடகத்தின் வாயிலாக பிரதமர் மோடி தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும் விளம் பரத் தந்திரம், சங்-பரிவார் கும் பல்கள் மேற்கொள்ளும் வன் முறைக் கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்கள் ஆகியவற்றை கூட் டத்தில் திரளாகத் திரண்டிருந்த வெகுமக்கள்  மத்தியில் அம்பலப் படுத்தினார்.

அனைத்துக்கட்சி பேரணி

கூட்டத்திற்கு முன்பாக அனைத்துக் கட்சித் தோழர்கள் தாராபுரம் அண்ணா சிலையிலிருந்து,பெரியார் திடல் வரை பேரணியாகச் சென்று அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனவுணர்வு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்கள்

தாராபுரம் திமுக நகரச் செய லாளர் கே.எஸ்.தனசேகர், தாராபுரம் வட்ட சிபிஅய்(எம்) செயலாளர் கனகராஜ்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செய்தித் தொடர்பாளர் வ.காளிதாஸ்,தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மக்கள் தொண்டன் மாசானம்,தமிழ்ப் புலிகள் கட்சியின் மேற்கு மண் டலச் செயலாளர் ஒண்டிவீரன் ஆகியோர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங் கேற்றுச் சிறப்பித்தனர்.

மந்திரமா! தந்திரமா!

கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பழனி அழகிரிசாமி அவர்களின் மந்திரமா ! தந்திரமா! எனும் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சி வெகுமக்கள் மத்தியில் அறிவியல் மனநிலையை உண் டாக்கியது என்று சொன்னால் அது மிகையில்லை!

கலந்து கொண்டவர்கள்

தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கவிஞர் கணியூர் ச.ஆறுமுகம், உடுமலை முருகேஸ் (பக), மடத்துக்குளம் ஒன்றிய கழகச் செயலாளர் கணியூர் பழ.நாகராஜ், கணியூர் வேலுமணி(பக), தாராபுரம் மு.மாரிமுத்து (பக), பெரியார்நேசன்(பக), இரா.சின் னப்பதாஸ்(திக),ஆ.முனீஸ்வரன், இராதா பெரியார்நேசன்(திக மகளிரணி),தாராபுரம் நகர திமுக துணைச் செயலாளர் அ.சக்தி வேல், சீனிவாசன் (திமுக), பெரி யார் பிஞ்சுகள் : ச. இளஞ்செழி யன்,சி.மதிவதனி,சி.பெரியார் நேசன்,மு.இளஞ்செழியன் மற்றும் அனைத்துக் கட்சியைச் சார்ந்த தோழர்கள்,வெகுமக்கள் கூட்டத்தில் திரளாகப் பங்கேற்றிருந்தனர் கூட்டத்தின் நிறைவாக தாரா புரம் நகர கழக தலைவர் மு.சங்கர் நன்றி கூறினார்.