எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, ஏப். 14- புதுக் கோட்டை அறந்தாங்கி கழக மாவட்டங்களின் சார்பில் பகுத் தறிவாளர் கழக கலந்துறவாடல் கூட்டம் நடந்தது. மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் 8.4.2018 காலை பத்து மணி யளவில் நடந்த இக்கூட்டத் திற்கு மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் முனைவர் மு.சு.கண்மணி தலைமை வகித்தார்.  மாவட்ட ப.க.தலைவர்கள் புதுக்கோட்டை அ.சரணவன், அறந்தாங்கி செ. அ.தர்மசேகர், புதுக்கோட்டை மாவட்ட ப.க.செயலாளர் இரா.மலர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ப.க. தலைவர் பி.சேகர் அனை வரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்தின் அறிவிய லாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மேனாள் அமைச்சர் சுயமரி யாதை வீரர் சிங்கம்புணரி செ. மாதவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கலும் வீர வணக்கமும் செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளராக மு.தேவேந்திரகுமார் நியமிக் கப்பட்டார். தீர்மானங்களாக கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

1. திராவிடர் கழக ஆங்கில வெளியீடான தி மாடர்ன் ரேஷ னலிஸ்ட் இதழுக்கு ஆசிரியர் கள், அரசு ஊழியர்கள் பகுத்தறி வாளர்கள், இன உணர்வாளர் கள் போன்றவர்களிடம் அணுகி பெருவாரியாக சந்தாக்களைச் சேர்ப்பது.

2. பகுத்தறிவாளர் கழகத் திற்கு ஆசிரியர்கள் அரசு ஊழி யர்கள் பகுத்தறிவாளர்கள் இன உணர்வாளர்களை அணுகி பெரு வாரியாக உறுப்பினர்களைச் சேர்ப்பது.

3. பெரியாரால் வாழ்கி றோம் தலைப்பில் கருத்தரங்கங் கள் ஒன்றிய வாரியாக நடத்தி பொதுமக்களிடமும் மாணவ மாணவியர் இளைஞர்கள் இளம் பெண்களிடம் தந்தை பெரியாரின் கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்டு சேர்ப்பது.

4. பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாண வர்களிடையே பல்வேறு போட் டிகளை நடத்துவது புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவை நகரங்கள், ஊர்கள் தோறும், பட்டி தொட் டியெங்கும் பகுத்தறிவுக் கருத் துகளையும் கொள்கைகளையும் கொண்டு சேர்க்க வேண்டும்.

நிகழ்வின் இறுதியில் ப.க. செயலாளர் இரா.மலர்மன்னன் நன்றி கூறினார்.

மாதம் தோறும் நடை பெறும் தந்தை பெரியாரியல் கருத்தரங்கு நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்விற்கு நகர ப.க.தலைவர் பி.சேகர் தலைமை வகித்தார். மானமும் அறிவும் என்ற தலைப்பில் ப.க.செயலாளர் இரா.மலர் மன்னன் கருத்துரை வழங்கி னார். பெரியாரியல் ஒருங்கி ணைப்பாளர் செ.இராசேந்திரன் ஆரிய அடிமைகளின் அடாவ டித்தனம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மேலும் மண் டலத் தலைவர் பெ.இராவ ணன், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், புதுக் கோட்டை மாவட்ட அமைப் பாளர் ஆ.சுப்பையா, பெரியார் பெருந்தொண்டர் தி.இராச மாணிக்கம், பகுத்தறிவாளர்கள் கழகத் தோழர்கள் ஆசிரியர்கள் பார்த்தசாரதி, மு.கீதா ஆகி யோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அ.பத்மநாபன் நன்றி கூறினார்.